பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

வேங்கடம் முதல் குமரி வரை

அப்பர் கண்ட கயிலைக் காட்சி

செய்து வந்த இருபத்து நான்கு ஆதிசைவரில் ஒருவர் காசியாத்திரை செல்கிறார். நீண்ட நாட்களாக அவர் திரும்பாததால் அவருடைய உரிமை, காணி முதலியவற்றைத் தாயாதிகள் கவர்ந்து கொள்ளுகின்றனர். இந்த நிலையில் இறைவனே அந்த ஆதிசைவர் வடிவில் வந்து தன் உரிமைகளை நிலை நாட்டுகிறான், இந்தச் சமயத்தில் காசி சென்ற ஆதி சைவரும் திரும்புகிறார். இந்த இருவரில் எவர் உண்மையான சைவர் என்று அறிய முடியவில்லை. வழக்கு நடக்கிறது. உண்மையான அந்தணரே வெற்றி பெறுகிறார். ஆதிசைவராக வந்த இறைவன் தம் உண்மை வடிவைக் காட்டி மறைகிறார்.

இந்த வரலாற்றை நினைந்தே ஐயாறதனில் இறைவன் சைவனாகிய பண்பைப் பாடிப்பரவுகிறார் மணிவாசகர், இத்தலத்தில் வழிபட்டு, அகத்தியர் தாம் விரும்பியபடி குறுகிய வடிவைப் பெற்றிருக்கிறார். இந்த ஐயாறப்பனை வணங்கி விட்டு முதல் திருச்சுற்று மாளிகையில் நடந்தால் அங்குள்ள தக்ஷிணாமூர்த்தியைக் கண்டு தொழலாம். இவர் கபாலமும் சூலமும் ஏந்திய கையராய் இருப்பார். இவர் திருவடிக் கீழ் ஆமை ஒன்றும் இருக்கும். ஒருமையுள் ஆமை போல் ஐந்து புலன்களையும் அடக்கியே குருமூர்த்தமாக எழுந்தருள