பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

193

தலைகாத்து ஐயர், செம்பொன்

சிலை எடுத்து மாநாக நெருப்புக்

கோத்து திரிபுரங்கள் தீயிட்ட

செல்வர் போலும்!

நிலை அடுத்த பகம் பொன்னால்

முத்தால் நீண்ட நிரை வயிரப்

பலகையால் குவையார்த்து உற்ற

மலை யடுத்த மழபாடி

வயிரத்தூணே! என்றென்றே

நான் அரற்றி நைகின்றேனே

என்பது அப்பர் தேவாரம். சுந்தரரோ, திருவையாறு வந்தவர், ஆலம்பொழில் வரை சென்று அங்கு இரவு தங்கியிருக்கிறார். அவருக்கு மழபாடி செல்ல வேண்டும் என்ற எண்ணம் அப்போது இருக்கவில்லை. மழபாடி இறைவனுக்கோ சுந்தரரை அப்படி எளிதாக விட்டுவிட விருப்பமில்லை. அவரிடம் பாடல் பெறும் வாய்ப்பை இழந்து விடுவோமோ என்று எண்ணியிருக்கிறார். ஆதனால் சுந்தரர் கனவில் தோன்றி, 'என்னை மறந்தனையோ?' என்று கேட்டிருக்கிறார். அதனால் சுந்தரர் கொள்ளிடத்தைக் - கடந்து இங்கு வந்திருக்கிறார். பாடிப் பரவியிருக்கிறார். அவருடைய,

பொன்னார் மேனியனே! புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே!
மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே உன்னை யல்லால்
இனி ஆரை நினைக்கேனே!

என்று தொடங்கும் பதிகம்தான் பிரபலமானதாயிற்றே. வயிரத்தூணாக இருந்த இறைவன் சுந்தரருக்குச் செக்கச்