பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

வேங்கடம் முதல் குமரி வரை

சிவந்த மாணிக்கமாக அல்லவா காட்சி கொடுத்திருக்கிறார். இன்னும் அந்தப் பொன்னார் மேனியன் பாட்டை நினைவு படுத்திக் கொண்டு, மழபாடி பக்கத்திலேயே பொன்னார் மேனி விளாகம் என்று ஒரு சிறு ஊரும் இருக்கிறதே.

இந்த மழபாடி மாணிக்கம் சிறந்த வரப்பிரசாதியாகவும் இருந்திருக்கிறார், வேத வியாசரது வாதநோய் இத்தலத்துக்கு அவர் வந்து வணங்கிய பின்தான் தீர்ந்திருக்கிறது. கோயில் பலி பீடத்தில் வைத்திருந்த உணவை ஒரு கழுகு வந்து சாப்பிட யத்தனிக்கையில் அதை ஒரு வேடன் அம்பெய்து வீழ்த்த அந்தக் கழுகுக்கு இரங்கி, அதற்கு மோக்ஷ பதவியையே அளித்திருக்கிறார். அந்தக் கழுகின் பரம்பரையில் வந்த கழுகு ஒன்று இன்றும் கோயில் கோபுரத்திலே வசித்து வருகிறது என்கிறார்கள். சந்திரனைப் பற்றியும் ஒரு கதை உண்டு.

அவனுக்கோ அசுவினி முதலிய இருபத்து ஏழு மனைவியர். இவர்களில் அவனுடைய காதலெல்லாம் ரோகிணியிடமே. இந்தப் பாரபக்ஷம் காட்டியதற்காக அவனது மாமனாரான தக்ஷன், அவன் கலை தேயச் சாபமிட்டிருக்கிறான். தேய்ந்த கலை வளர அருள் புரிந்தவர் இந்த மழபாடி மாணிக்கமே என்பது புராணக் கதை. அதனால் இவர் வைத்தியநாதர் என்ற பெயரையுமே ஏற்றிருக்கிறார். இத்தனை விவரங்களையும் இறைவன் சந்நிதிமுன் நின்றே தெரிந்து கொள்ளலாம். அதன்பின் திருவுண்ணாழிச் சுற்றைச் சுற்றப்புறப்பட்டால் அங்குதான் மழு ஏந்தி நடனம் செய்த இறைவனை ஒரு தாழ்ந்த மாடத்தில் பார்ப்போம். அதனை அடுத்தே செப்புச் சிலை வடிவில் சோமாஸ்கந்தரது வடிவம் ஒரு சிறு கோயிலுள் இருக்கும். கற்சிலையாகச் சோமாஸ்கந்தரை எல்லா இடத்தும் காணுதல் இயலாது.

இந்தத் தலத்தில் இவர் விசேஷமானவர், இந்த மூர்த்திகளையெல்லாம் வணங்கியபின் வெளியே வந்துதான்