பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

195

வடபக்கம் தனிக் கோயிலில் இருக்கும் அன்னை அழகம்மையைக் காணவேண்டும். அழகம்மையின் வடிவம் அழகானது என்பதைத் தவிர, சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இத்தலத்தின் சிறப்பான திருவிழா பங்குனி மாதத்தில் நடக்கும் நந்தியம் பெருமானின் திருமண விழாதான். நந்தி என்றால் கோயில் வாயிலில் இறைவனை நோக்கிப் படுத்துக் கிடக்கும் காளை என்றுதானே தெரியும் நமக்கு. அந்த நந்தி மனித வடிவம் தாங்கி இறைவனது அம்சமான திரிநேத்திரம், மழு, மான் ஏந்திய நான்கு கரங்களோடு சிவ கணங்களுக்கு எல்லாம் தலைவராய்ப் பதவி பெற்று, முதல் திருவாயிலிலேயே இருந்து காக்கும் உரிமையையும், சைவ ஆச்சாரியருள் முதல் குருவாக இருக்கும் தன்மையையும் பெற்று அதிகார நந்தி என்ற பெயரோடு விளங்குகிறார் என்பதை நம்மில் பலர் அறியமாட்டோம். சிலாத முனிவரின் மகனாகப் பிறந்து செபேசுரர் என்ற திருமநாமத்தோடு வாழ்ந்து, அரிய தவம் செய்து இறைவனது அருளைப் பூரணமாகப் பெற்று, பின்னர் வசிஷ்டரது பௌத்திரியும் வியாக்கிரபாதருடைய புத்திரியும், உபமன்யரது தங்கையுமான சுயம்பிரபையை மணந்திருக்கிறார்.

இவரே சிவ கணங்களுக்கு எல்லாம் தலைவரான அதிகார நந்திதேவர். இவரது திருமணம் சிறப்பாக நடந்தது. இந்த மழபாடியில்தான். இங்குதானே மணப்பெண்ணான சுயம்பிரபை பிறந்து வளர்ந்து இவருக்கெனக் காத்திருக்கிறாள். இந்தத் திருமணத்துக்கு மணமகனையும் அழைத்துக் கொண்டு ஐயாறப்பரும் அறம் வளர்த்தாளும் வந்திருக்கிறார்கள். இந்த மணமக்களை அழைத்துக் கொண்டே. ஐயாறப்பர் ஏழூர் காணப் புறப்பட்டிருக்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்தது இத் தலம். இக்கோயிலின் சரித்திர ஏடுகள் மிக மிக விரிவானவை. மொத்தம் முப்பது கல்வெட்டுக்கள் இக்கோயிலிலிருக்கின்றன. மதுரை கொண்ட கோப்பர