பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22. தென்னரங்கத்து இன்னமுதன்

லங்கை ஓர் அழகான தீவு. இந்தியத் தாயின் கழுத்தில் அணியும் நித்திலப் பதக்கம்போல் அமைந்த தீவு. ஆகவே அதனை நித்திலத் தீவு என்றனர் கவிஞர்கள். நாற்புறமும் கடல் சூழ்ந்து நடுவே மலைச்சிகரம் உயர்ந்து எங்கும் பசுமை கொழித்துக் கொண்டிருக்கும் நாடு அது. காடெல்லாம் பசுமை, மலை எல்லாம் பசுமை, காணும் வயலெல்லாம் பசுமை என்னும்படி தென்னை, கமுகு, வாழை நிறைந்திருப்பதுடன் மலைச் சிகரங்களையெல்லாம் தேயிலைச் செடிகள் வேறே மூடிக் கொண்டிருக்கும், அந்த நாட்டில் கருமையே இல்லை. வானுலாவும் கார்மேகங்களையும், தெருக்களிலே பறந்து செல்லும் மோட்டார் கார்களையும் தவிர வேறு கருமையை அங்கு காண்பதே அரிது. இப்படி வளம் கொழிக்கும் இலங்கையில், சைவம் என்றும் நிலைபெற்று நின்றிருக்கிறது. பௌத்தம் வந்து சேர்ந்திருக்கிறது.

ஆனால் இந்த வைணவம் மட்டும் அங்கு சென்று சேரவில்லை. அந்த மகாவிஷ்ணுவே அங்கு செல்ல மறுத்திருக்கிறார். 'பாஸ்போர்ட்', 'விசா' எல்லாம்

வே.மு.கு.வ - 14