பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

201

செலவழித்திருக்கிறான். இவன் கட்டிய மதிலே ஆலிநாடன் திருமதில் என்ற பெயரோடு நின்று நிலவுகிறது இன்றும்.

ஏழு பிரகாரங்களோடு கூடிய இந்தக் கோயிலுக்கு இருபத்தொரு கோபுரங்கள். அவைகளில் முக்கியமானவை இரண்டு; ஒன்று கீழ்ப்பக்கம் உள்ள வெள்ளைக் கோபுரம்.

விமானம் தென்னரங்கம்

மற்றொன்று தென்பக்கம் உள்ள நான்முகன் கோபுரம். கோயிலுள் நுழையும் பிரதான வாயில் இந்த நான்முகன் கோபுர வாயிலே தென்திசை நோக்கி அரவணையில்துயிலும் அரங்கநாதனைத் தரிசிக்கத் தென் வாயில் வழியாகச் செல்வதுதானே முறை. இந்த வாயில்வரை வண்டியும் காரும் செல்லும். இதற்கும் தெற்கே மண்டபங்கள், முற்றுப் பெறாத கோபுரம் எல்லாம் உண்டு. இனி நாம் நான்முகன் கோயில் வாயிலைக் கடந்து உள்ளே செல்லலாம். அப்போது உங்கள் முன் நிற்பது ரங்க மண்டபம். அதையும் முந்திக்கொண்டு ஒரு நாலுகால் மண்டபம். அதில் முறுக்கு மீசையும் திருகிக் காட்டிய கொண்டையும் உடைய ஒரு பெரியவர் கூப்பிய கையராய் நிற்பார் சிலை உருவில். இவரையே கம்பர் என்பார்கள், அந்த ராமகாதை எழுதிய கபைக் கம்பருக்கும் இந்தச் சிலைக் கம்பருக்கும் யாதொரு -