பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

வேங்கடம் முதல் குமரி வரை

ஒற்றுமையும் காண இயலாது. இவர் அந்த ரங்கமண்டபம் கட்டிய நாயக்க மன்னர்களில் ஒருவராக இருக்கலாம்.

ரங்க மண்டபம் - கார்த்திகை மண்டபம் எல்லாம் கடந்துதான் பிரதானக் கோயிலுள் நுழைய வேணும். அங்குள்ள பெரியதொரு மண்டபத்தில் கருடாழ்வார் பெரிய வடிவில்

வெள்ளைக்கோபாம்

அரங்க நாதனைச் சேவித்த வண்ணம் நின்று கொண்டிருப்பார். அவரையும் வணங்கி விட்டு மேல் நடந்தால் அடுத்த கட்டு. அங்கே பொன் போர்த்த கொடி மரம், பலிபீடம் எல்லாம். அவை இரவில் மின்விளக் கொளியில் கண்டால் சோதி மயமாக இருக்கும். இவற்றை யெல்லாம்கடந்துதான் கருவறைப் பக்கம் வரவேணும். இங்குள்ள கருப்பக் கிருஹம் பிரணவாகாரத்தில் அமைந்திருக்கிறது. அந்தக் கருவறையின் பேரில் உள்ள விமானம்தான் ரங்கவிமானம். அந்த விமானத்துக்கே பொன் தகடு வேய்ந்து அதில் பரவாசு தேவனையும் உருவாக்கி நிறுத்தியிருக்கிறார்கள். இந்த விமானமே ஆதியில் விபீஷணன் எடுத்து வந்த விமானம் என்பர். இந்த விமானத்தோடு கூடிய கருவறையிலேயே அரங்கநாதன் அறிதுயில் கொள்ளுகிறான். -