பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

வேங்கடம் முதல் குமரி வரை

மனைவியர். அதனால்தானோ என்னவோ தனிமையை விரும்பிக் கருவறையில் ஒருவரையுமே நுழைய விடாமல் கதவடைத்துக் கொண்டிருக்கிறான். எத்தனை மனைவியர் இருந்தாலும் இவனது பட்டமகிஷி ஸ்ரீரங்கநாயகிதான். இவள் தனிக் கோயிலில் குடியிருக்கிறாள். ரங்கநாதரைத் தரிசித்த பின் கொஞ்சம் சுற்றி வளைத்து நடந்தே இவள் கோயிலுக்குச் செல்லவேணும், செல்லும் வழியிலே ஒரு மண்டபம். அங்குதான் கம்பனது ராமாயண அரங்கேற்றம் நடக்கும்போது சித்திரத்தில் தீட்டிய நரசிம்மமே தலையசைத்துச் சிரக்கம்பம் செய்து பாராட்டியது என்பது வரலாறு. அந்த மண்படத்தை எல்லாம் கடத்தே ஸ்ரீரங்கநாயகி சந்நிதிக்கு வரவேணும். அவள் படிதாண்டாப் பத்தினி. அவள் உத்சவகாலங்களில் கூடத் தன் கோயிலை விட்டு வெளியே வருவதில்லை.

ஸ்ரீரங்கநாதர்தான் அவளைத் தேடிக்கொண்டு அவள் கோயிலுக்கு வருகிறார். ரங்கநாயகிக்கு அடுத்த படியாக ரங்கநாதருக்கு உகந்த மனைவி உறையூர் கமலவல்லிதான், உறையூரிலிருந்து அரசாண்ட நந்தசோழன் மகள் அவள். தாமரை ஓடையிலே கமல மலர்களோடு மலராகப் பிறந்தவள் இக்கமலவல்லி. இவள் அரங்நாதனிடம் ஆராத காதல் கொள்கிறாள். அதிரூப சுந்தரியான இவளை மணக்க இந்த ரங்கநாதருக்குக் கசக்கவா செய்யும்? அவளையும் மணந்து கொள்கிறான். அதன்பின் அரங்கத்திலும் உறையூரிலுமாக இருந்து வாழ்கிறான். இக்கமல்வல்லியைப் போலவே சேரமன்னன் குலசேகரப் பெருமானது மகள் சேரகுலவல்லியும் ரங்நாதனையே காதலித்து மணந்து கொள்கிறாள்.

இவர்களைத் தலிர, ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெரியாழ்வார் திருமகளாக அவதரித்த ஆண்டாளும் இந்த ரங்கநாதனிடத்திலே காதல் கொள்கிறாள். அவளுக்கும் இந்த அரங்கநாதன் ரங்கமன்னாராகவே சேவை சாதித்து