பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/226

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

வேங்கடம் முதல் குமரி வரை

கொடுக்கும் திருநீறெல்லாம் பொன்னாக மாறுகிறது என்று மட்டும் ஆகிவிட்டால் கோயிலுக்கு வருவார் தொகையே பெருகிவிடாதா?).

ஏகபாத திரிமூர்த்தி

இந்த மதிலை எல்லாம் கடந்து வந்தால் வட பக்கம் ஆயிரக்கால் மண்டபத்தைக் காண்போம். அதற்கு எதிரே ஒரு பெரிய மண்டபத்தை அடுத்துத் திரி மூர்த்திகள் கோயில். அங்கு சென்று படி ஏறினால் ஓர் அதிசயம் காத்து நிற்கும், ஆம்! பிரும்மா, விஷ்ணு, சிவன் எல்லோருமே லிங்கத் திருவுருவிலே தனித் தனி கோயிலில் இருப்பார்கள். இந்த மூவரும் சேர்ந்த திரு உருவம் ஒன்றும் அங்குள்ள தூணில் இருக்கும். அதனையே ஏகபாத திரிமூர்த்தி என்று கூறுவார்கள். இத்திரிமூர்த்திகளையும் வணங்கியபின் துவஜஸ்தம்ப மண்டபத்துக்கு வருவோம். அந்த மண்டபம் பிரும் மாண்டமான மண்டபம். அம்மண்டபத்தை நான்கு பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணுக்கும் மேல் எட்டுச் சிங்கங்கள் மண்டபத்தையே தாங்கி நிற்கும். மேலும் இத்தூண்களில் எல்லாம் தலவரலாறுகளைத் தெரிவிக்கிற சிற்ப வடிவங்கள் உண்டு. இவற்றையெல்லாம் கண்டு அதிசயித்த பின்னரே அடுத்த சோமாஸ்கந்த மண்டபத்துக்குச் சென்று அந்தப்