பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

213

பிரகாரத்தைச் சுற்ற வேணும். அப்படிச் சுற்றி வரும்போது கீழ்ப்புறம் கருவறை மேல் கட்டப்பட்ட விமானத்தை ஒட்டி வெண்நாவல் மரம் ஒன்று விரிந்து பரந்திருக்கும். இதனை இரும்பு அழி போட்டுப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

இங்கு சம்பு முனிவர் இருந்து தவம் செய்திருக்கிறார். இந்த மரத்தின் அடியிலேயே இறைவன் வதிவது காரணமாக இத்தலத்துக்கே சம்புகேசுவரம் என்ற பெயரும் நிலைத்திருக்கிறது. இதனையும் கடந்து மேற்கு நோக்கி வந்தே கருவறை வாயில் செல்லவேணும். இறைவன் மேற்கே பார்க்க லிங்க வடிவில் மிகத் தாழ்ந்த இடத்தில் இருக்கிறார். அவர் சந்நிதிக்குமுன் ஒன்பது துவாரங்கள் கொண்ட ஒரு கல் பலகணி உண்டு. அதன் வழியாகத் தரிசித்த பின்னரே தென்பக்கம் உள்ள வாயில் வழியாக அந்தராளம் செல்லவேணும். அங்குநான்கைந்து பேர்கள் நிற்பதே மிக்க சிரமம். ஆதலால் முன் சென்றவர் எல்லாம் வெளிவரும் வரையில் காந்திருந்தே பின் சென்று வணங்குதல் கூடும். இங்கோ எப்போதும் நீர் பொங்கிக் கொண்டேயிருக்கும். அர்ச்சகரும் தண்ணீரை எடுத்து வெளியே கொட்டிக் கொண்டே யிருப்பார். அன்னை பிடித்தமைத்த அப்புலிங்கம் அல்லவா, அங்கு நீர் பொங்கி வழிவதில் வியப்பு என்ன? இப்படி அப்பு வடிவிலும், லிங்க வடிவிலும் உள்ள இறைவனை வணங்கி வெளியே வரும் போது,

தென்னானைக் காவானை தேனைப்
பாலை, செழுநீர்த்திரளைச்
சென்று ஆடினேனே

என்று நாவுக்கரசரோடு சேர்ந்து நாம் பாடிக்கொண்டே வரலாம்.

இனி நாம் கிழக்கு நோக்கி நிற்கும் அகிலாண்டேசுவரி சந்நிதியை நோக்கி விரையலாம். இத்தலத்திலேயே இறைவனாம் அப்பு லிங்கத்தைவிட அருள் பாலிக்கும்

வே.மு.கு.வ - 15