பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24. சிராப்பள்ளிக் குன்றுடையான்

பாண்டிய மன்னன் ஒருவன் தன் பட்ட மகிஷியுடன் அரண்மனையின் உப்பரிகையிலே இருக்கிறான், மாலை நேரம் அது. அப்போது மந்தமாருதம் மெல்லெனத் தவழ்ந்து வருகின்றது. அந்தத் தென்றலூடே இனிய மணம் ஒன்றுமே மிதக்கிறது. அந்த நறுமணம் எங்கிருந்து வந்தது? இனிமையும் குளிர்ச்சியும் தவிர, தென்றலுக்கு என்று ஒரு நறுமணம் கிடையாதே என்று எண்ணுகிறான். ஒருவேளை தன் மனைவி அவளது கூந்தலில் நறுமலர் ஏதாவது சூடியிருப்பாளோ என்று அவள் தன் கூந்தலைப் பார்க்கிறான். அவள் அன்று கூந்தலில் மலர் ஒன்றும் அணிந்திருக்கவில்லை.

அப்படி யானால் மணம் எங்கிருந்து வந்தது என்று மீண்டும் பிறக்கிறது கேள்வி. இரவு முழுதும் இதே சிந்தனையில் இருந்த மன்னன் விடிந்ததும், தன் ஆஸ்தான மண்டபத்தில் பொற்கிழி ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு, தன் உள்ளத்தில் எழுந்த எண்ணத்தையும் அதற்குரிய விடையையும் கூறுவார்க்கு அந்த பொற்கிழி உரியது என்று சங்கப் புலவர்களிடம் தெரிவிக்கிறான். பல நாட்கள் கிழி அறுபடாமலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒருநாள்