பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

219

கூந்தலுடன் கூடிய அம்பிகையைக் கண்டு தரிசிக்க விரும்பினேன் நான். பல தலங்களில் கூந்தல் அழகிகளான தேவியர் பலரைக் கண்டு வணங்கியிருக்கிறேன். அவர்கள் எல்லாம் வண்டார் பூங்குழலி என்றும், ஏலவார் குழலி என்றும், கொந்தார் பூங்குழலி என்றும், குரவங்கமழ் குழலி என்றே பெயர் பெற்றவர்கள். பெற்ற பெயருக்கு ஏற்ப மலர்ச் சேர்க்கையால் ஏற்பட்ட மணம் நிறை கூந்தல் உடையவர்களே அவர்கள். இயற்கையிலேயே நறுமணம் உடைய கூந்தல் அழகி ஒருத்தியும் இருக்கவே செய்கிறாள். அவளே சுகந்த குந்தலாம்பிகை, மட்டுவார் குழலி. அவள் கோயில் கொண்டிருக்கும் இடமே சிராப்பள்ளி குன்று. அந்தச் சிராப்பள்ளி குன்றுக்கே செல்கிறோம் நாம் இன்று.

தேவாரத்தில் சிராப்பள்ளி என்று வழங்கும் தலமே பின்னர் திருச்சினாப்பள்ளி என்று மக்கள் வாயில் பயின்றிருக்கிறது. இன்று தமிழ் நாட்டின் நடு நாயகமாய்த் திருச்சிராப்பள்ளி என்னும் திருச்சிக்குச் செல்ல நான் வழி சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா? சிராப்பள்ளி மலையும் மலைமேல் உள்ள தாயுமானார், அம்மலை உச்சியில் உள்ள பிள்ளையார் கோயில்களும் ரயிலில் வந்தாலும் சரி, ரோட்டில் வந்தாலும் சரி, பல மைல் தூரத்திலேயே தெரியும்.

ஜங்ஷனில் இறங்கி இரண்டு மைல் வடக்கே சென்றால் மலைக்கோட்டை கோயில் வாயில் வந்து சேரலாம். திருச்சி டவுன் ஸ்டேஷனில் இறங்கினால் கூப்பிடு தூரத்திலேயே தெரியும். ஜங்ஷனில் இறங்கி இரண்டு மைல் வடக்கே சென்றால் மலைக்கோட்டை கோயில் வாயில் வந்து சேரலாம். திருச்சி டவுன் ஸ்டேஷனில் இறங்கினால் கூப்பிடு தூரமே. இந்த மலைக்குத் திரிசிராமலை என்று ஏன் பெயர் வந்தது? அதுவா, இராவணனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் கரன், தூஷணன், திரிசிரா என்பவர்கள். இவர்களில் திரிசிரா இறைவனைப் பிரதிஷ்டை செய்து வணங்கிய தலம் இது