பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

வேங்கடம் முதல் குமரி வரை

என்பர் ஒரு சாரார். இல்லை, இங்கு, உச்சிப்பிள்ளையார், இறைவன், இறைவி மூவரும் ஆளுக்கு ஒரு சிகரத்தின் மேல் இருக்கிறார்கள். அதனால் திரிசிகரம், திரிசிரா ஆயிற்று என்றும் கூறுவர். இதோடு பழைய கதையையுமே கேட்போம் அங்கு போனால். வாயுவுக்கும் ஆதிசேஷனுக்கும் பலப்பரீட்சை நடக்கிறது; ஆதிசேஷன் கயிலை மலையைக் கட்டிப் பிடித்துக்கொள்ள, வாயு வேகமாக அடிக்க, கடைசியில் ஆதிசேஷன் அசந்த சமயத்தில் கயிலை மலையிலிருந்து பெயர்ந்த மூன்று துண்டுகள் காளத்தியிலும், இங்கும், இலங்கை திரிகோண மலையிலும் விழுந்தன என ஒரு புராண வரலாறு. அப்படி விழுந்த துண்டே இங்கு குன்றாக நிற்கிறது என்றும் கூறுவர், பள்ளி என்பதால் ஜைன முனிவர்கள் தங்கியிருந்திருக்கலாம். இத்தனையும் தெரிந்தபின் நாம் மலை ஏறலாமே? இங்குள்ள கோயில், மலைமேல் இருக்கிறது. மலை காவிரிக்குத் தெற்கே ஒரு மைல் தூரத்தில் ஊருக்கு நடுவே