பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

223

திரும்பும் வழியில் உள்ள மணி மண்டபம் பதினாறுகால் மண்டபங்களையும் பார்க்கலாம்.

மணி மண்டபத்தில் உள்ள மணி, நாலு அடி எட்டு அங்குலம் உயரம் உள்ளது. இரண்டரை டன் நிறையுள்ளது என்பர். இதையெல்லாம் கணிக்கத் தவறினாலும் வழியில் உள்ள பல்லவ குடைவரையைக் காணத் தவறக்கூடாது. இக் குடைவரை தாயுமானார் கோயிலிலிருந்து உச்சிப் பிள்ளையார் கோயில் போகும் வழியில் முதலிலேயே இருக்கிறது. இதனை லளிதாங்குர பல்லவேசுவர கிருஹம் என்று புதைபொருள் இலாகாவினர் போர்டு போட்டு நமக்கு அறிவிக்கிறார்கள். பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் அமைத்த குடைவரை; இக் குடைவரையில் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் சுவர் முழுதும் கல்வெட்டுக்கள்; அதில் 104 செய்யுள்கள் தமிழில் அந்தாதித் தொடையாகவே இருக்கின்றன.

இன்னும் இங்குதான் பிரசித்தி பெற்ற கங்காதரரது சிற்ப வடிவம் உப்புச உருவில் இருக்கிறது. அவர் நிற்கும்

கங்காதரர்