பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

225

ஆதலால் கோயிலின் கட்டடக் கலையினைப் பார்த்தே மெற்மறக்கலாம், தலை நிமிர்ந்து நடக்கலாம் நாம்.

இந்தக் கோயிலில் மூலவர் மாத்ருபூதேசுவரர், தாயுமானவர், செவ்வந்தி நாதர், திருமலைக் கொழுந்தீசர் என்றும் பெயர் பெறுவர். இவர் உயிர்களுக்கெல்லாம் தந்தையாவர் என்பது நமக்குத் தெரியும். தாயும் எப்படி ஆனார் என்று தெரிய வேண்டாமா? காவிரிப் பூம்பட்டினத்திலே ரத்தின குப்தன் என்ற ஒரு செட்டியார்; நல்ல சிவபக்தர். அவருக்கு ரத்னாவதி என்று ஓர் அருமை மகள்; அவளைத் திரிச்சிராப்பள்ளியில் உள்ள தனகுப்தன் என்பவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார்; பின்னர் இறந்து போகிறார். ரத்தினாவதி கருப்பவதி ஆகிறாள். பேறு காலத்துக்குத் தன் தாயின் வரவை எதிர்பார்க்கிறாள்; தாயும் வருகிறாள். வரும் வழியில் காவிரியாற்றிலோ பெருவெள்ளம். கடக்க முடியவில்லை. அக்கரையிலே நிற்கிறாள். இதற்குள் பிரசவ நேரம் நெருங்குகிறது. சிராமலை இறைவனே, ரத்தினாவதியின் தாய் வடிவில் வந்து அவளுக்கு வேண்டியதை எல்லாம் செய்கிறார். அவளும் சுகமாக ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்கிறாள். ஆற்றில் வெள்ளம் குறைந்ததும் உண்மைத் தாயார் வருகிறாள்.

தாயின் வடிவில் வந்த இறைவன் தன்னுருக் காட்டி மறைகிறார். இப்படி உலகுயிர் அனைத்துக்கும் தந்தையாக இருப்பவர், செட்டிப் பெண்ணுக்குத் தாயாகவும் வந்து அவள் பிரசவ காலத்தில் உதவி புரிந்ததனால்தான் ‘தாயுமானார்' என்று பெயர் பெறுகிறார். இந்த இறைவனது லிங்கத்திரு உரு நல்ல காத்திரமான வடிவம். இத்தலத்தில் கோயில் வாயில் எல்லாம் கிழக்கு நோக்கி இருந்தாலும் இறைவனும் இறைவியும் மேற்கு நோக்கியே நிற்கிறார்கள். மேற்கு நோக்கிய மூல லிங்கத்தின்மீது ஒவ்வொரு வருஷமும் பங்குனி மாதம் 23, 24, 25-ம் தேதிகளில் மாலைச் சூரியனது கிரணம் விழுவதுண்டு . அப்படி விழும் வகையில் கோயில் மதிலைக்