பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

231

இந்த மூன்று தலங்களும் சோமாஸ்கந்த மூர்த்தம் போல் அமைந்திருக்கின்றனவாம். உண்மைதான். தெற்கேயுள்ள வாட்போக்கி சிவனது உருவத்தில் உயர்ந்த மலைமேல் இருக்கிறது. வடக்கேயுள்ள ஈங்கோயும் சக்தி உருவில் மலையாக உயர்ந்திருக்கிறது. இடையே உள்ள கடம்பந்துறைதான் தரையோடு தரையாய்க் கந்தன் உருவத்தில் இருக்கிறது. அதனால் தான் இம்மூன்று தலங்களையும் அங்குள்ள மூர்த்திகளையும் ஒரே நாளில் கண்டு வணங்கினால் சோமாஸ்கந்த மூர்த்தியையே வணங்கிய பலன் கிடைக்கும். சரிதான் புறப்படுவோம் மூன்று தலங்களையும் ஒரே நாளில் கண்டு தரிசிக்க.

ஆம். முதல் முதலில் கடம்பந்துறைக்கே செல்வோம். அத்துறை கந்தனின் அம்சமாக இருப்பதினால் அல்ல. அங்கு செல்லத்தான் ரயில் வசதி இருக்கிறது. திருச்சி ஈரோடு லயனில் இருக்கிறது கடம்பந்துறை, ரயில்வே ஸ்டேஷனில் கடம்பந்துறைக்கு ஒரு டிக்கட் என்று கேட்டால், புக்கிங் கிளார்க் பரக்கப் பரக்க விழிப்பார். ஆதலால் டிக்கட்டைக் குழித்தலைக்குத்தான் எடுக்கவேணும். குழித்தலை என்ற பெயரில் தானே கடம்பந்துறை இன்று விளங்குகிறது. இக்குழித்தலை திருச்சிக்கு மேற்கே இருபத்திரண்டு மைல் தொலைவில் ஒரு தாலுகாவின் தலைநகராய் விளங்குகிறது.

ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி வடக்கு நோக்கி ஒரு மைல் நடந்தால் அங்குள்ள கடம்ப வனநாதர் கோயில் வாயில் வந்து சேரலாம். கோயில் காவிரிக் கரையிலே இருக்கிறது. சிவன் கோயில்களெல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி, இல்லை, மேற்கு நோக்கி இருப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். இந்தக் கோயில் மாத்திரம் வடக்கு நோக்கி இருக்கிறது. கங்கைக் கரையில் காசி விசுவநாதர் கோயில் வடக்கு நோக்கியிருப்பது போல் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோயில் இது ஒன்றுதான். இங்குள்ள இறைவன் வட்டக்கு