பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

233

வருஷங்களுக்கு முன் பூமியின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது என்கிறார்கள்.

இக்கோயிலில் பார்க்க வேண்டியவை வேறு ஒன்றும் இல்லை, இக்கோயில்களில் உள்ள கல்வெட்டுக்களில் ஒன்று 1552-ல் விஜயநகர மன்னன் கிருஷ்ணதேவராயனது, அதில் இத்தலத்தை ‘ராஜகெம்பீர வளநாட்டுக் குழித்தண்டலைச் சீமையான கணபதி நல்லூர்' என்று குறித்திருக்கிறது. காலை ஏழு மணிக்கே இங்கு வந்திருக்கிறோம். இப்போது மணி ஒன்பது. இன்னும் இரண்டு கோயில்களை மாலை மங்குவதற்குள் சென்று காணவேண்டும். நீர் என்னடா வென்றால் இப்போதுதான் கல்வெட்டுக்களை ஆராய முனைகிறீர்' என்று நீங்கள் சொல்வது என் காதில் விழத்தான் செய்கிறது. ஆதலால் இத்தலத்தை விட்டுப் புறப்படலாம். மத்தியானச் சொக்கரைக் காண்பதற்கு.

ஐயர் மலை

மத்தியானச் சொக்கர் முன்னமேயே சொன்னது போல் தரையில் இருப்பவர் அல்ல, ஒரு நல்ல மலைமீது ஏறியே நிற்கிறார். அந்த மலையையே ரத்தினகிரி என்பார்கள். அந்த