பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/248

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

வேங்கடம் முதல் குமரி வரை

மலையே மணப்பாறை செல்லும் ரோட்டில் குழித்தலைக்குத் தெற்கே ஆறுமைல் தூரத்தில் இருக்கிறது. அத்தலத்துக்குக் காரிலும் போகலாம்; பஸ்ஸிலும் போகலாம்; மாட்டு வண்டியிலும் போகலாம். மாட்டு வண்டியிலும் போனாலும் காலை பத்துப் பத்தரைக்குள் சென்று சேர்ந்து விடலாம். தூரத்தில் போகும்போதே மலை தெரியும். ஆம். அம்மலைதான் 1200 அடி உயரம் உயர்ந்திருக்கிறதே. இந்த மலையைத்தான் சிவாயமலை, ஐயர்மலை, வாள் போக்கி, ரத்தினகிரி என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள்.

ஓம் என்னும் பிரணவ எழுத்தைப்போல் மலையும் படியும் அமைந்திருப்பதால் சிவாயமலை என்றார்களாம். மலையில் ஒரு பக்கம் சமண முனிவர் படுக்கைகள் ஐந்து இருப்பதைப் பார்த்து இதனைப் பஞ்ச பாண்டவர் மலை என்றிருக்கிறார்கள். இந்தப் பஞ்ச பாண்டவரே பின்னர் ஐவர் என்றும் அதன் பின்னர் ஐயர் என்றும் திரிந்து இம்மலைக்கு ஐயர்மலை என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

இம் மலைக்கு ஏன் ரத்தினகிரி என்றும் வாள்போக்கி என்றும் பெயர் வந்தது? அதுவா, ஆரிய மன்னன் ஒருவனது மணிமுடி காணாமல் போய்விட்டது. புதிய மகுடம் செய்து கொள்ள நல்ல ரத்தினங்கள் தேடி இப்பக்கம் வந்திருக்கிறான் அவன். அவன் முன்னால் இறைவன் ஓர் அந்தணன் வடிவில் தோன்றி, தொட்டி ஒன்றைச் சுட்டிக்காட்டி அதைக் காவிரி நீரால் நிரப்பினால் ரத்தினங்கள் தருவதாகக் கூறியிருக்கிறார். அப்படியே மன்னன் நீர் கொணர்ந்து குடம் குடமாய்க் கொட்டியும் தொட்டி நிறையக் காணோம். அதனால் கோபமுற்ற மன்னன் தன் உடைவாளை உருவி அந்தணன் தலையில் வெட்டியிருக்கிறான். உடனே இறைவனாம் அந்தணன் மறைய, மன்னன் தான் செய்த தவறுக்காக வருந்துகிறான். அதன்பின் மன்னனுக்கு இறைவன் மாணிக்கம் ரத்தினம் எல்லாம் அருளுகிறான். வாளால் ஏற்பட்ட தழும்பு