பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

235

இன்னும் இறைவன் திருமுடியில் இருக்கிறது. அதனால் முடித்தழும்பர் என்றும் அவன் அழைக்கப்படுகிறான். இப்படி மன்னன் வாள் போக்கிய காரணத்தால் வாள் போக்கி என்றும் மன்னனுக்கு ரத்தினம் கொடுத்ததால் ரத்தினகிரி என்றும் வழங்குகிறது.

இனி, மலை ஏறலாம். மலை ஏறுவது கொஞ்சம் கடினம். மொத்தம் 952 படிகள் ஏறிக் கடக்க வேணுமே. அடி வாரத்திலிருந்து மலை ஏறும் இடத்திலே ஒரு பெரிய உருண்டைப் பாறையிலே விநாயகர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இவருக்குப் பூசை போட்டால் மழை பெய்யுமாம். இன்னும் கொஞ்சம் ஏறினால் பொன்னிடும் பாறை என்று ஒரு பாறை. அதையும் கடந்து சென்றால் சப்த மாதர் கோயில். அதையும் கடந்து அதன்பின் உள்ள வசந்த மண்டபத்தையும் கடந்தால்தான் அம்பாள் சந்நிதி வந்து சேரலாம். அங்குதான் தலவிருட்சமான வேப்பமரம் இருக்கிறது. சரி, ஒரு மட்டும் கோயில் ஏறி வந்துவிட்டோம் என்று பெருமூச்சு விட்டால் உடன் வருபவர்கள் ‘இன்னும் கொஞ்சம் ஆம், எழுபது படிகள் மாத்திரம் ஏறிவிட்டால் சுவாமி சந்நிதி சேரலாம்' என்பார்கள். இன்னமா எழுபது படி? வந்ததோ வந்தோம், மூச்சைப் பிடித்துக்கொண்டு ஏறி உச்சிக் கால சேவைக்கு இறைவன் கோயிலுக்குச் சென்று சேர்ந்து விடலாம், அம்பாள் கிழக்கு நோக்கி நின்றால் இறைவன் மேற்கு நோக்கி நிற்கிறார். இவரையே ரத்தின கிரீசர், வாள் போக்கி முடித்தழும்பர், மலைக்கொழுந்தீசர், மத்தியானச் சொக்கர் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

இறைவியோ கரும்பார் குழலி. கல்வெட்டுக்களில் மாணிக்க மலை உடைய நாயனார், ஹாலட்சேஸ்வரி என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இறைவனைத் தரிசித்து விட்டுக் கீழே இறங்கலாம். இறங்குவது சிரமமாக இராது. இருந்தாலும் கால்வலிக்கும் குறைவிராது. படி இறங்கிய பின்