பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

வேங்கடம் முதல் குமரி வரை

சாவதானமாக அடி வாரத்தில் இருக்கும் கருப்பண்ணர், வைரமேகப் பெருமாள், கோர உரு நாய்க்கர் முதலிய சந்நிதிகளுக்குச் செல்லலாம். இவர்களில் பிரசித்தி பெற்றவர் வைரமேகப் பெருமாளே, காஞ்சியிலுள்ள ஆயர்குலத்தினர் ஒருவர் ஒரு பிரார்த்தனை செய்து கொள்ளுகிறார். பிரார்த்தனை நிறைவேறினால் தலையையே தருவதாகப் பிரதிக்ஞை செய்கிறார். பிரார்த்தனையை முடித்து வைக்கிறார் ரத்னகிரீசர். சொன்னபடியே தம் தலையையே பலியாகக் கொடுக்கிறார் பிரார்த்தித்துக் கொண்டவர். அவரே வைரமேகப் பெருமாள் என்னும் பெயரில் இத்தலத்தின் காவல் தெய்வமாக இருக்கிறார்:ஆம், இத்தகைய வைர நெஞ்சம் படைத்தவரை வைர மேகப் பெருமாள் என்று அழைக்காமல் வேறு என்னபெயர் சொல்லி அழைப்பது?

இன்னும் இந்த வட்டாரத்தில் ஒரு வகுப்பினர் பன்னிரண்டாம் செட்டியார் என்று அழைக்கப்படுகின்றனர். எதற்காக இவர்களுக்கு இந்தப் பெயர் என்றால், என்றோ , எப்போதோ, பதினோரு வணிக மக்கள் தங்கள் சொத்தைப் பங்கு போட்டுக்கொள்ளத் தெரியாமல் திண்டாடியபோது இறைவனே ஒரு செட்டியாராக வந்து இருந்த சொத்துக்களைப் பன்னிரண்டு பங்கு வைத்து ஒரு பங்கைத் தாம் எடுத்துக்கொண்டு மறைந்திருக்கிறார். அதனால் மற்றப் பதினோரு பேருடைய பரம்பரையும் பன்னிரண்டாம் செட்டியார் என்று அழைக்கப்படுகின்றனர். இறைவன் கெட்டிக்காரர்தான், பன்னிரண்டாம் செட்டியாராக வந்து பொருளைச் சுற்றிக்கொண்டு போனதுடன் ஏமாந்த சோணகிரிகளான மற்றப் பதினோரு பேருக்கும் பன்னிரண்டாம் செட்டியார் என்ற பெயரையும் சூட்டிவிட்டல்லவா சென்றிருக்கிறார்.

என்ன? மணி ஒன்று ஒன்றரையாகிறதே! சாப்பாட்டிற்கு ஏதாவது வழி உண்டா? எப்போது ஈங்கோய்