பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

237

மலை போவது என்றுதானே நினைக்கிறீர்கள்? சாப்பாடு இந்தச் சிவாய மலையில் கிடைக்காது. வந்த வண்டியிலேயே திரும்பிக் குழித்தலை சென்று அங்குதான் உணவு அருந்த வேணும். ரத்தினகிரி மலை ஏறிய அலுப்புத் தீரக் குழித்தலையில் உள்ள ஜில்லா போர்ட் தங்கும் விடுதியில் வேண்டுமானால் கொஞ்சம் இளைப்பாறலாம். அதன் பின் மாலை நாலு மணிக்குத் திரும்பவும் பயணத்தைத் தொடங்கலாம். குழித்தலையிலிருந்து ஈங்கோய் மலை செல்லக் காவிரி ஆற்றைக் கடக்க வேணும். இத்தலம் காவிரியின் வடகரையில் இருக்கிறது. அத்துடன் இங்கே காவிரி ஒரு மைல் அகலம் உள்ளதாய் இருக்கிறது. இந்த அகண்ட காவிரியைக் கடக்க மணத்திட்டை என்ற இடத்திற்குச் சென்று பரிசல் ஏறித்தான் செல்ல வேணும்.

ஈங்கோய் மலைக்கோயில்

பரிசல் ஏற விருப்ப மில்லாதவர்கள் சொந்தக் கார் வைத்துக்கொண்டு திருச்சி வந்து அங்கிருந்து சேலம் செல்லும் நெடுஞ் சாலையில் 27 மைல் செல்லவேணும். நாம் தாம் ஆற்றைக் கடக்கத் துணிந்தவர்களாயிற்றே! ஆதலால் பரிசில் ஏறியே அக்கரை சென்று ஈங்கோய் மலை ஏறலாம். இந்த மலை ரத்தின கிரியைப் போல் அவ்வளவு உயரமில்லை சுமார் 500 படிகள் ஏறினால் போதும், கோயிலுக்கு வந்து சேரலாம். மாலை