பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26. கருவூர் பசுபதீஸ்வரர்

ரு வீட்டின் பின்புறம் படரும் செடிகள் சில வைத்திருக்கிறார்கள். அவரை, புடல், பீர்க்கு, சுரை முதலிய காய்கறித் தோட்டம் அது. தோட்டத்திற்கோ பெரிய வேலி ஒன்றும் இல்லை. அடுத்த வீட்டுக் கன்றுக் குட்டி ஒன்று இந்தத் தோட்டத்தில் நுழைந்து பசுமையாய் இருந்த செடிகளைத் தின்று விடுகிறது. தோட்டம் போட்டிருந்தவர் இதனைக் காண்கிறார். கோபம் பிறக்கிறது அவருக்கு, கன்றுக் குட்டியை விரட்ட, பக்கத்தில் கிடந்த கம்பு ஒன்றை எடுத்துக் கன்றுக்குட்டியின் மீது விசுகிறார். வேகத்தோடு வீழ்ந்த கம்பு கன்றின் கால் ஒன்றை முறித்துவிடுகிறது. அவ்வளவுதான்; கன்றுக்குட்டியின் சொந்தக்காரர், 'ஆம் அடுத்த வீட்டுக்காரர்தான் - எப்படி என் கன்றுக்குட்டியின் காலை முறிக்கலாம்?' என்று வெளியே வருகிறார்.

இரண்டு வீட்டுக்காரர்களுக்குமே கலகம். இந்தக் கலகம் காரணமாக ஒருவரை இன்னொருவர் கொலை செய்கிறார்; கொலை செய்தவர் நீதி ஸ்தலத்தில் குற்றம் சாட்டப்பட்டுக் கடைசியில் தூக்குத் தண்டனையே பெறுகிறார். இரு குடும்பங்களும் ஒரு சிறு தோட்டம் காரணமாக அழிந்தே