பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

241

போகின்றன. இது நடந்தது சென்ற சில வருஷங்களுக்கு முன்னால். ஆனால் பல வருஷங்களுக்கு முன்னால் ஓர் அதிசய சம்பவமே நிகழ்ந் திருக்கிறது. ஒரு குட்டிக் கலகம் காரணமாக. அக்கலகத்தில் ஈடுபட்டவர்கள் நல்ல பக்தியுடைய பெருமக்கள் ஆனதினாலே, பெருந்தன்மையோடு நடந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். அறுபத்து மூன்று அடியார்களில் இருவராகத் திருத்தொண்டர் புராணத்திலேயே இடம் பெற்று விடுகிறார்கள். அவர்கள் தாம் எறிபக்தர், புகழ்ச்சோழர் என்பவர்கள், அவர்களது கதை இதுதான். எறிபக்தர் சிறந்த சிவபக்தர். சிவ அபசாரம் ஏதேனும் நடந்தால் அவர் சகிக்கமாட்டார்.

கருவூரார்

சிவபெருமானை வழிபடுவதும், சிவனடியார்களுக்குத் துன்பம் ஒன்றும் வராமல் காப்பதுமே அவர் பணியாக இருக்கிறது. சிவகாமி ஆண்டார் என்பவரோ சிவபெருமானுக்கு மலர் மாலை சாத்தும் பணி செய்பவர். ஒருநாள் நந்தவனத்தில் மலர் பறித்து வரும்போது நாட்டை ஆளும் மன்னன் புகழ்ச் சோழனது பட்டத்து யானை சிவகாமி ஆண்டார் கையிலிருந்த மலர்க் கூடையைப் பறித்து மலரையெல்லாம் சிதறி விடுகிறது. பாகன்