பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

வேங்கடம் முதல் குமரி வரை

இதனைத் தடுக்க வில்லை. இதைக் கண்ட எறிபக்தர் தம் கையிலுள்ள மழுவால் யானையின் துதிக்கையை வெட்டியதோடு பாகனையும் தாக்குகிறார். யானையும் பாகனும் அந்த இடத்திலேயே மாண்டுவிடுகின்றனர். சேதி அறிந்த மன்னன் தலத்துக்கு விரைகிறான். மழுவுடன் நின்றகொண்டிருந்த எறிபத்தரைக் காண்கிறார். உடனே அவர் திருவடியில் விழுந்து யானையையும் பாகனையையும் கொன்றது போதாது, அவர்கள் செய்த சிவ அபசாரத்துக்குத் தம்மையுமே பலிவாங்க வேண்டுமென்று வேண்டுகிறார். எறி பக்தர் மன்னின் சிவபக்தியைக் கண்டு மாழ்குகிறார். இறைவனும் இருவரது பக்தியை மெச்சி அவர்களுக்குத் தரிசனம் தருகிறான். இத்துடன் நிற்கவில்லை புகழ்ச் சோழனது புகழ், பகையரசனாகிய அதிகன் பேரில் படைகொடு சென்று வெற்றி பெறுகிறான். போர்க்களம் சென்ற சோழன், தம் படையினர் கொன்று குவித்த வீரர்களிடையே சடைமுடியுடைய ஒரு தலையைக் காண்கின்றான். 'ஐயோ! இது என்ன அபசாரம்? சிவபக்தரை அல்லவா மடியச் செய்து விட்டார்கள் நம் வீரர்கள் என்று வருந்துகிறான். பின்னர் எரி வளர்த்து அச்சடை முடியுடைய தலையை ஏந்திய வண்ணமே தீக்குளித்து முத்தி எய்துகிறான். இப்படிப் புகழ்ச்சோழன் புகழ் பெறுகிறான். இந்த இரண்டு தொண்டர்களது. வரலாற்றையும் சேக்கிழார் விரித்து உரைக்கிறார், அவரது பெரிய புராணத்தில். இந்த இருவரும் வாழ்ந்த தலமே கருவூர், அந்தக் கருவூரிலே இருப்பவர் பசுபதி ஈசுவரர், அவரது திருக்கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று .

கருவூர் கொங்கு நாட்டுத் திருத்தலங்களில் ஒன்று. கிட்டத்தட்ட ஒரு வருஷ காலமாகச் சோழநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றைக் கண்டு களித்த நாம், சோழநாட்டை விட்டுக் கொங்கு நாட்டில் புகுகிறோம். கொங்கு நாட்டில் நமது தலயாத்திரை கருவூர் பசுபதீசுவரரை முன் நிறுத்தித்