பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

243

தொடங்கு கிறது மகிழ்ச்சி தருகின்றது. கருவூர் திருச்சிக்கு நேர் மேற்கே ஐம்பது மைல் தொலைவில் இருக்கிறது.

புகழ்ச் சோழர்

திருச்சி ஈரோடு ரயில் பாதையில் கரூர் என்ற . ஸ்டேஷனில் இறங்கி மேற்கு நோக்கி ஒரு மைல் நடந்தால் கோயில் வாயில் வந்து சேரலாம்.. கோயில் பெரிய கோயில். நல்ல சுற்று மதிலோடு கூடியது. மதில் கிழமேல் 465 அடி நீளமும் தென் வடல் 250 அடி அகலமும் உடையது என்றால் அதன் அளவு கொஞ்சம் தெரியும் அல்லவா? இந்தக் கோயிலை ஆனிலை என்றும் இக்கோயில் இருக்கும் கருவூரை வஞ்சி, பசுபதீச்சுரம், பாஸ்கரபுரம் என்றெல்லாம் கூறுகிறார்கள், காமதேனு பூசை செயது வழிபட்டதால், கோயிலை ஆனிலை என்றும் கற்பந்தோறும் தவம் செய்த பிரமன் படைப்புத் தொழில் செய்யக் கரு உற்பத்தி செய்த இடம் ஆதலின் கருவூர் என்றும் பெயர் பெற்றிருக்கிறது. இத்தலம் முழுதும் வஞ்சுள வனமாக இருந்த காரணத்தால் இதனை வஞ்சி என்றும் அழைத்திருக்கின்றனர் (சேரர் தலைநகரம் வஞ்சி இத்தலமே என்றும், அது