பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

வேங்கடம் முதல் குமரி வரை

சரியில்லை அத்தலை நகரம் திருவிஞ்சைக் களமே என்றும் ஆராய்ச்சியாளர்கள் அன்றுமுதல் இன்றுவரை வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வாதத்தில் எல்லாம் நாம் இறங்க வேண்டாம்.) இத்தலத்தின் சிறப்பு என்னவென்றால் பழைய சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்வது ஐந்து ஊர்கள்தாம். அதில் இந்தக் கருவூலம் ஒன்று என்பது. மற்றவை காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், சேய்ஞலூர் என்றும் கூறுவர். இங்கிருந்து அரசாண்ட சோழ மன்னனுக்குத் தெய்வ யானையார் திருமணநாளிலே தேவேந்திரனே அழைப்பு அனுப்பி வைத்திருந்தான் என்ற பெருமையும் உண்டு.

இத்தனை தகவலையும் தெரிந்துகொண்ட பின் கோயில் வாயிலைக் கடந்து உள்ளே செல்லலாம். சென்றால் ஒரு பெரிய திறந்த வெளி முற்றம் இருக்கிறது. அதில் வடப்பக்கம் நூற்றுக்கால் மண்டபம் அழகு செய்கிறது. இடை நிலைக் கோபுரத்தின் முன்னர் ஒரு மண்டபம் சமீபத்தில் கட்டியிருக்கிறார்கள். அங்குதான் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் பொதுச் சமய சன்மார்க்க சங்கத்தார் கூடுகின்றனர். வாரம் தவறாது சமயச் சொற்பொழிவுகளும் நடக்கின்றன.

இனி இடைநிலைக் கோபுரத்தையும், மகா மண்டபத்தையும் கடந்து கருவறை வந்தால் அங்கு பசுபதி ஈசுவரர் லிங்க உருவில் இருப்பார். இவர் கொஞ்சம் வலப்பக்கமாகச் சாய்ந்திருக்கிறார். திருமுடியில் பசுவின் கொம்பு பட்ட வடுவேறே இருக்கிறது. காமதேனு வழிபடும்போது கொம்பு பட்டிருக்கும்போலும். அது காரணமாகவே கொஞ்சம் சாய்வும் ஏற்பட்டிருக்க வேணும். காமதேனு வழிபட்ட இவ்விறைவனைப் பங்குனி மாதத்தில் மூன்று தினங்கள் சூரியனும் வழிபடுகிறான். காலை 6-30 மணிக்கெல்லாம் சூரியகிரணம் வாயில் கொடிமரம் எல்லாவற்றையும் கடந்து