பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/259

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

245

வந்து இறைவன் திருமேனியைத் தழுவுகிறது. சரிதான். ஏன் இத்தலம் பாஸ்கரபுரம் என்று பெயர் பெற்றிருக்கிறது? என்பது இப்போதல்லவா விளக்கமுறுகிறது. இங்குள்ள பசுபதி லிங்கரைத் தவிர வேறு நான்கு லிங்கத் திருவுருவங்கள் உண்டு. ஆதி நாயகராகிய பசுபதிக்குக் கீழ்ப்பக்கத்தில் கோடீச்சுரர், அதற்கும் கீழ்பால் கயிலாய நாதர், அதற்கும் தெற்கே கரியமாலீசர், அதற்கும் தெற்கே ஆம்பிரவதி நதிக்கரையிலே வஞ்சுளேச்சரர் என்பவர் எல்லாம் லிங்கத் திருவுருவில் இருக்கின்றனர். ஒன்று சொல்ல மறந்து விட்டேனே! இந்தப் பசுபதி ஈசுவரர் கோயில் ஆம்பிர நதிக்கரையிலே இருக்கிது. ஆனமலைத் தொடரிலே உற்பத்தியாகி மாமரங்கள் அடர்ந்த சோலை வழியாக ஓடிவருவதால் ஆம்பிரவதி என்று பெயர் பெற்றது போலும்! இதனையே மக்கள் அமராவதி என்று கூறுகின்றனர். இந்த நதி கருவூருக்குக் கிழக்கே திருமுக்கூடல் என்ற தலத்திலேயே காவிரியுடன் கலக்கிறது. இறைவன் சந்நிதியில் நின்று கொண்டிருந்த நாம் மனத்தை எங்கெல்லாமோ செல்ல விட்டுவிட்டோமே. கொஞ்சம் வேகமாவே இத்தலத்தில் உள்ள இறைவியைக் காணச் செல்வோம். கிழக்கு நோக்கிய ஈசன் சந்நிதியிலிருந்து வடக்கு நோக்கி நடந்து ஒரு வாயிலைக் கடந்தால் எதிரே நிற்பாள் சௌந்திரவல்லி தெற்கு நோக்கியவளாய். பெயருக்கு ஏற்ப அவள் நல்ல சௌந்தர்யவதிதான், அவளைப் பார்த்த கண்களைக் கொஞ்சம் இடப்பக்கம் திருப்பினால் அங்கு ஓர் அலங்காரவல்லி கிழக்கு நோக்கி நிற்பாள் திவ்ய அலங்கார பூஷிதையாக. என்ன? இந்த இறைவன் ஏகபத்னி விரதன் ஆயிற்றே, இவர் எப்போது இரண்டாவது தாரத்தை மணம் முடித்தார்? என்று நாம் அதிசயிப்போம்! இங்கு முதல் முதல் கோயில் கொண்டவள் அலங்காரவல்லிதான். அச்சிலை வடிவம் கொஞ்சம் பின்னம் அடைய அவளை ஒதுக்கிவிட்டுச் சௌந்தரவல்லியை உருவாக்கியிருக்கிறான் மன்னன். ஆனால்

வே.மு.கு.வ - 17