பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

வேங்கடம் முதல் குமரி வரை

அவன் கனவில் அலங்காரவல்லி தோன்றி, தான் தன் இடத்தை விட்டு அசையமாட்டேன் என்று மறுத்திருக்கிறாள். அவ்வளவுதான்! அவளும் இருக்கட்டும் புதிதாய் உருவான செளந்திரவல்லியும் இருக்கட்டும்’ என்று செளந்தர வல்லியைத் தெற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்திருக்கிறான். இந்தத் தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார்.

விண் உலா மதிசூடி வேதமே
பண் உளார் பரமாய பண்பினர்
கண் உளார் கருவூருள் ஆனிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லரே

என்று பாடியிருக்கிறார். இத்தலத்திலுள்ள முருகனை அருணகிரியார் திருப்புகழ் பாடிப் பரவியிருக்கிறார். கருவூர் என்றாலே கருவூர்த் தேவர் நினைவுக்கு வருவாரே. அவரைப் பற்றித் தெரிய வேண்டாமா? அவரது சந்நிதி வெளிப்பிரகாரத்தில் தென்பக்கம் ஒரு சிறிய கோயிலாக இருக்கிறது. இவர்தான் அன்று திருவிசைப்பா பாடியவர். எண்ணற்ற அதிசயங்கள் செய்து காட்டியவர். தஞ்சைப் பெருவுடையாரை ஆவுடையாரில் பொருந்தச் செய்தவர். கடைசியில் பசுபதி ஈசுவரரோடு இரண்டறக் கலந்தவர். இவருக்கும் நம் வணக்கங்களைச் செலுத்திவிட்டு வெளியே வரலாம். இக்கோயிலிலும் நிறையக் கல்வெட்டுக்கள் உண்டு. சோழ மன்னர்களான வீர ராஜேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன், விக்கிரமன் முதலியவர்களோடு வீர பாண்டியன், சுந்தர பாண்டியன், மீனாக்ஷி நாயக்க மன்னர்கள் நிபந்தங்களைப்பற்றிக் கல்வெட்டுக்களிலிருந்து அறியலாம்.

வந்ததே வந்தோம், இத்தலத்திலுள்ள ரங்கநாதரையும், இத்தலத்தின் பக்கத்தில் உள்ள தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணரையும் வெண்ணெய்மலை பால சுப்பிரமணியரையும் வணங்கிவிட்டே திரும்பலாமே. பசுபதீசுவரர் கோயிலுக்குக் கீழக்கே ஆறு பர்லாங்கு