பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/266

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

வேங்கடம் முதல் குமரி வரை

விநாயகர் காக்கை உருவில் வந்து கவிழ்த்திருக்கிறார். அதனால் காவிரி என்ற பெயரே இந்நதிக்கு வந்தது என்பது வரலாறு. இன்னும் இக்காவிரியின் நடுவிலே உள்ள பாறையை அகத்தியர் மலை என வழங்குகின்றனர் மக்கள், காகம் கவிழ்த்த விநாயகர், காவிரி கண்ட விநாயகர் என்ற பெயரில் கோயில் பிரகாரத்திலேயே இருக்கிறார். கோயிலுள் செல்லும்போது அவரைத் தரிசித்துக் கொள்ளலாம்.

இத்தலத்தில் மலை ஒன்றும் இல்லையே, இத்தலத்துக்கு எப்படிக் கொடுமுடி என்று பெயர் வந்தது என்று அறிய விரும்புவோம். அதற்கும் அந்தப் பழைய கதையை ஒரு புதிய மெருகுடனே, தலவரலாறு கொடுக்கும். தேவலோகத்திலே ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் ஒரு பலப்பரீக்ஷை. சேடன் மகாமேருவைப் பற்றிக் கொள்ள வாயு தன் பலம் கொண்ட மட்டும் வீசி அதைப் பறிக்கப் பார்க்கிறான். முழு மலையும் பெயரவில்லை என்றாலும் மூன்று சிறு துண்டுகள் பெயர்ந்து விழுந்தது. அவையே காளத்தி, திருச்சி, திரிகோணமலை என்ற குன்றுகள் என்று முன்னமேயே தெரிந்திருக்கிறோம்.

வாயுவின் வேகத்தில், ஆதிசேடன் தலையில் உள்ள ஐந்து மணிகள் வேறே சிதறியிருக்கின்றன. அவைகளில் சிவப்புமணி அண்ணாமலையிலும், மரகதம் ஈங்கோய் மலையிலும், மாணிக்கம் வாட்போக்கியிலும், நீலம் பொதிகையிலும், வைரமணி இத்தலத்திலும் விழுந்திருக் கின்றன. வைரம் மற்ற மணிகளில் எல்லாம் சிறந்த மணியாயிற்றே. அதுவே கொடுமுடியாக நின்றிருக்கிறது இங்கே. அந்தக் கொடுமுடியின் சிகரமே இக்கோயிலில் லிங்கத் திருஉருவாகவும் இருக்கிறது என்று அறிவோம். கொங்கு நாட்டில் உள்ள இக்கொடுமுடிக்குப் பாண்டிக் கொடுமுடி என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை.

இனி நாம் கோயிலுள் நுழையலாம். கோயில் பெரிய கோயில். மூன்று பிரிவாக இருக்கின்றன. இறைவனுக்கு,