பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/274

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

வேங்கடம் முதல் குமரி வரை

எல்லாம் நரசிம்மருக்குத்தான். நரசிம்மர் இங்கு கோயில் கொள்ள எழுந்தருளிய வரலாற்றைத் தெரிந்துகொண்டே மேல் நடக்கலாம்.

மகாவிஷ்ணு நரசிம்மாவதாரம் எதற்காக எடுத்தார் என்பது தெரியும். இரணியனைச் சம்ஹரித்த நரசிம்மரது வடிவம்

நரசிம்மர் - நாமக்கல்

பார்க்கப் பயங்கரமானதாக இருந் திருக்கிறது. திருமகளாம் லட்சுமிகூடஅவர் பக்கலில் செல்ல அஞ்சுகிறாள். தேவர்களும் கண்டு நடுங்குகின்றனர். எல்லோரும் அந்தப் பரம பாகவதனாகிய பிரகலாதனையே வேண்டிக் கொள்கின்றனர், உக்கிர நரசிம்மரது உக்கிரத்தைத் தணிக்க. பிரகலாதன் வேண்டிக் கொண்டபடியே சாந்த மூர்த்தி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர்கிறார். இதற் கிடையில் பரந்தாமனைப் பிரிந்த திருமகள் கமல வனத்திடையே ஒரு கமலாலயத்தை அமைத்துக் கொண்டு கடுந்தவம் புரிகிறாள். இப்படிக் கண்டகி நதிக்கரையில் பரந்தாமனும் கமலாலயக் கரையில் திருமகளும் இருக்கும்போது அனுமன் ராம லக்குமணர்க்காகச் சஞ்சீவி பர்வத்தை எடுத்து வரச் செல்கிறான், சென்று திரும்பும் போது கண்டகி நதிக் கரையில் உள்ள சாளக்கிராம நரசிம்மரைக் காணுகிறான்.