பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/275

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

261

அவரையும் எடுத்துக் கொண்டே வருகிறான். வருகிற வழியில் சுமலாலயத்தைக் கண்டதும் அங்கு நீர் அருந்த இறங்குகின்றான். நரசிம்மரைக் குளக்கரையில் வைத்துவிட்டு நீர் அருந்துகிறான். திரும்பி வந்து நரசிம்மரை எடுத்தால் அவர் கிளம்பவே மறுத்து விடுகிறார். அவர் திருமகளைப் பிரிந்துதான் எவ்வளவு காலம் ஆகிவிட்டது. அவளோ இக்கமலாலயக் கரையில் தவக்கோலத்தில் இருக்கிறாள். அவளுக்கு அருள்புரிய வேண்டாமா? ஆதலால் அங்கேயே தங்கி விடுகிறார். லட்சுமியையும் சேர்த்துக் கொண்டு லட்சுமி நரசிம்மனாகவே சேவை சாதிக்கிறார். லட்சுமிக்கும் தனியாக ஒரு கோயில், நாமகிரித் தாயார் சந்நிதி என்று இருவரையும் இணைத்து வைத்த அனுமாருக்கும் இங்கே ஒரு விசேஷ சந்நிதி.

வண்டிக்காரர்களுக்கு நாம் கோயில் பார்க்க வந்திருக்கிறோம் என்று தெரிந்தாலே அவர்கள் நம்மை நேரே அனுமனது சந்நிதியில் கொண்டுதான் நிறுத்துவார்கள். அவர் கிழக்கு நோக்கியவராய்ச் சுமார் 15 அடி உயரத்தில் அஞ்சலி ஹஸ்தராய் நிற்கிறார். நல்ல கம்பீரமான திருஉரு. இவரைச் சுற்றிச் சுவர் எழுப்பிக் கம்பிக் கதவெல்லாம் போட்டிருக்கிறார்கள். அதனால் அர்ச்சகர் இல்லாவிட்டாலும் கண்டு வணங்க வாய்ப்பு உண்டு. இந்தக் கட்டிடத்துக்கு விமானம் அமைக்கவில்லை.

இவர் கைகூப்பி நிற்கும் திசை நோக்கி நடந்தால் நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் கோயில் கொண்டிருக்கும் சந்நிதி வாசலுக்கு வந்து சேருவோம். நரசிம்மரைத் தரிசிக்கக் கொஞ்சம் படி ஏறலாம், ஏறவேணும். அக்கோயில் குடைவரைக் கோயில். மகேந்திர வர்ம பல்லவன் காலத்தியது. அனுமார் கொண்டு வந்தது சாளக்கிராம வடிவம் என்பது புராணக் கதை. இன்று நம் கண்முன் காண்பது நல்ல சிலை

வே.மு.கு 18