பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

வேங்கடம் முதல் குமரி வரை

வடிவம். உப்புச உருவில், பெரியதொரு சிம்மாதனத்தில் நரசிம்மர் வீற்றிருப்பார். 'அளந்து இட்ட தூணை அவன் தட்ட, ஆங்கே வளர்ந்திட்டு, வாள் உகிர்ச் சிங்கமாய் உளந்தொட்டு, இரணியன் ஒண் மார்பு அகலம் பிளந்திட்ட பெருமான்' அல்லவா? ஆதலால் அந்த மூர்த்தியின் திருக்கரங்களில் இன்னும் செந்நிற வண்ணம் இருக்கிறது.

திருமாலின் திரு அவதாரங்கள் அத்தனையிலும் ஈடுபட்டு நின்ற அந்த மங்கை மன்னன், நரசிம்ம மூர்த்தியை.. நினைத்து ஒரு நல்ல பாட்டுப் பாடியிருக்கிறார்.

தளை அவிழ் கோதை மாலை
இருபால் தயங்க. எரிகான்று
இரண்டு தறுதாள்
அளவு எழ, வெம்மை மிக்க
அரி ஆகி, அன்று பரியோன்
சினங்கள் அவிழ
வளைஉகிர் ஆளி மொய்ம்பின்
மறவோனது ஆகம் மதியாது
சென்று ஓர் உகிரால்
பிளவு எழ விட்ட குட்டம்,
அது வையம் மூடு பெருநீரில்
மும்மை பெரிதே.

என்பதுதான் அவரது பாட்டு. ரத்தக் கறையைக் காண்கிறோமே ஒழிய ரத்தக் கடலைக் காணவில்லை. அதையெல்லாம் இவ்வளவு காலம் கழுவித் துடைக்காமலா வைத்திருப்பார்கள்? நரசிம்மரது கண்களில் அருள் பொழியும் கருணையே நிறைந்திருக்கும். கல் வடிவில் இதனைக்