பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/279

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

265

ரங்கநாதரைத் தரிசித்த பின் படிக்கட்டுகளில் இறங்கித் தளத்துக்கு வந்து திரும்பவும் கிரிப்பிரதக்ஷிணத்தைத் தொடர்ந்தால் நாம் காண்பது கமலாலயம். இதுதான் அன்று அனுமனது தாகவிடாய் தீர்த்திருக்கிறது. இன்று நாமக்கல் மக்களுக்குப் பிரதான குடி தண்ணீர்க் குளமாக விளங்குவதும் இதுதான். இனித்தான் மலை ஏறி வரதராஜரைக் காணவேண்டும். மலை ஏறுவது சிரமம்தான். வசதியாக ஏறப் பட்டிக்கட்டுகள் இல்லை. அங்கு ஒரு கோட்டை இருக்கிறது. கோட்டைக்குள்ளே கோயில் இருக்கிறது. கோயில் உள்ளே இருக்கிறார் வரதராஜர். இவர் இவ்வளவு உயரத்தில் வந்து ஏறியிருப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. பக்கத்திலுள்ள காஞ்சி சென்று கர்சிவரதரைக் கண்டு சேவிக்கும் பழக்கம் உடைய அந்தணர் ஒருவர், வயது முதிர்ந்த போது தளர்ச்சி அடைகிறார். கச்சிக்கு முன்போல் செல்ல முடியவில்லை, அது காரணமாக ஏங்குகிறார். வரதன் அருளாளன் அல்லவா? ‘நீர் நம்மைத் தேடிவர இயலாவிட்டால் நாம் உம்மைத் தேடி வருகிறோம்' என்று சொல்லி இங்கு வந்து மலைமீது ஏறி நின்றிருக்கிறான். வரதன் செய்தது ஒரே ஒரு தப்புத்தான். காஞ்சிக்கு வர இயலாத அந்தணருக்காக இந்த நாமகிரிக்கு வந்த வரதர் மலை அடிவாரத்தில் அல்லவா இருந்திருக்க வேணும்? மலை மேல் ஏறி நின்று கொண்டால்? நமக்குக் கூட எவ்வளவு தூரம் ஆனாலும் கச்சிக்குப் போய் வருவது எளிதாகப்படுகிறது, இந்த நாமக்கல் மலைமேல் ஏறுவதை விட.

மகேந்திரவர்மன் குடைந்த குடைவரைகளே இங்குள்ளவை என்று கண்டோம். இங்குள்ள கோயில்களைப் பின் வந்த மன்னர்களே கட்டியிருக்க வேண்டும். இக்கோயில் கல்வெட்டுக்களில் இந்தத் தலத்தை அதியேந்திர விஷ்ணு கிருஹம் என்று அழைத்திருக்கின்றனர். இந்த விஷ்ணு கிருஹமே பின்னர் விண்ணகரமாக ஆகியிருக்கிறது. சங்க இலக்கியம் படித்தவர்களுக்குத் தகடூர் (இன்றைய தர்மபுரி)