பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

வேங்கடம் முதல் குமரி வரை

அதிகமான் நெடுமான் அஞ்சி நன்கு அறிமும் ஆகியிருக்க வேண்டும். அவன்தானே ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன். அவன் வழித் தோன்றல்களே அதிகர் என்று வழங்கப்பட்டிருக்கின்றனர். அந்த அதிகர் குலத்து மன்னன் ஒருவனே கோயிலைக் கட்டியிருக்கலாம். அதனால் அதியேந்திர விஷ்ணுகிரகம் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.

நாமக்கல் வந்த நரசிம்மர், ரங்கநாதர், வரதர் இவர்களைப் பார்த்ததோடு திரும்பிவிட முடியாது. பக்கத்திலே இருப்பது கொல்லிமலை. அங்கு அன்று

வேட்டுவ முருகன்

கொல்லியம் பாவை இருந்தாள் என்பர் சங்க காலச் சான்றோர். அவள் இருந்தாளோ இல்லையோ? இன்று நாமக்கல்லிலிருந்து 15 மைல் தூரத்தில் உள்ள பேலுக்குரிச்சியை (வேலுக்குரிச்சிதான் இப்படி மாறி இருக் கிறது.) அடுத்துள்ள கொல்லிமலைச்சாரலிலே ஒரு சிறிய குன்றின் பேரிலே முருகன் நிற்கிறான், வேட்டுவக் கோலத்தில். தலையிலே வேட்டுவனது கொண்டை, வலக்கையிலே தண்டு, இடக்கையிலே ஒரு கோழி. இந்தக்