பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

267

கோலத்தில்தான் அவன் வள்ளியை மணம்புணர வந்திருக்கிறான். கொல்லி மலைச் சாரலைக் கண்டதும் அங்கேயே தங்கியிருக்கிறான். அவன் பேரில் குருக்கள் ஒருவர் பாட்டு ஒன்று பாடியிருக்கிறார்.

வள்ளிக்கு இசைந்த மணவாளன் வேடுவனாய் அள்ளிக் கொளும்பேர் அழகுடனே - துள்ளுகின்ற கோழியினைக் கையிடுக்கி கொல்லிமலைச் சாரலிலே
வாழுகின்றான் சென்றே வணங்கு

என்று எனவே, அந்த வேட்டுவ முருகனையும் கண்டு தொழுதுவிட்டே திரும்பலாம்.