பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/282

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29. செங்கோட்டு அர்த்தநாரி

ர் இலக்கியக் கூட்டம். அக்கூட்டத்தில் ஓர் அறிஞர் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவரோ சிறந்த சீர்திருத்தவாதி, ஆணுக்குப் பெண் ‘சரிநிகர் சமானம்' என்று அறைகூவுகிறார். பேச்சின் இடையிலே சொன்னார் : ‘நம் நாடு ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்த பொழுது சீமையில் இந்தியா மந்திரியாக இருந்த பெதிக்லாரன்ஸ் என்பவர் பெயர் எப்படி அமைந்தது தெரியுமா? லாரன்ஸ் என்பதுதான் அவர் பெயர். பெதிக் என்பது அவரது மனைவியின் பெயர், இருவரும் சமூக சேவையில் ஈடுபட்டவர்கள். அது காரணமாக இருவரும் தங்கள் இருவரது பெயரையும் இணைத்தே மக்களிடம் அறிமுகம் செய்து கொண்டனர், அம்மை பெயர் மிஸஸ் பெதிக் லாரன்ஸ் என்றால் ஐயா பெயர் மிஸ்டர் பெதிக்லாரன்ஸ். நாமோ நமது மனைவியின் பெயரை முழுக்கவே மறக்கடித்து விடுகிறோம். மிஸஸ் ராமசாமி, மிஸஸ் கிருஷ்ணசாமி என்றே அவர்களையும் அழைத்து வருகிறோம். இது சரியா?' என்ற பேசிக் கொண்டே போனார். அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த நான் இதற்குக் கொஞ்சமும் சளைக்கவில்லை ‘ஆணும் பெண்ணும் சரிநிகர்