பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/285

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

271

திருச்செங்கோடு, சேலம்மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்காவின் தலைநகரம். இத்தலம் சேலத்துக்குத் தெற்கே 28 மைல் தூரத்தில் இருக்கிறது. சேலம் ஜங்ஷனில் இறங்கிக் கார் வைத்துக் கொண்டு செல்லலாம். சேலம் - ஈரோடு ரயில் பாதையில் சங்ககிரிதுர்க்கம் என்னும் ஸ்டேஷனில் இறங்கித் தென்கிழக்காய் ஆறு மைல் வண்டி பிடித்துக் கொண்டும் சென்று சேரலாம். சொல்லப்போனால் செங்கோடு என்பதே செங்குன்று, செங்கிரி என்றெல்லாம் வழங்கி, சங்சுகிரி என்றும் வழங்கப்படுகிறதோ என்னவோ?

இந்தச் சங்ககிரியிலும் ஒரு சிறு குன்று உண்டு, அதனால்தானே சங்ககிரி துர்க்கம் என்று பெயர் பெற்றிருக்கிறது. சங்ககிரியில் இருந்து போகும் போதே திருச்செங்கோட்டு மலை தெரியும். பெயருக்கு ஏற்பவே சிவந்த நிறத்தோடு அம்மலை காட்சி அளிக்கும். இன்னும் அம்மலை மேல் ஏறி நிற்கும் அர்த்தநாரியைப் போலவே இரண்டு சிகரங்கள் வேறே பின்னிப் பிணைந்து நிற்பதும் தெரியும். பின்னிக் கிடக்கும் பெருங்கோடாகத் திருச்செங்கோடு இருப்பதனால் தானே, வேறு எங்கும் இல்லாத அர்த்தநாரி மூர்த்தம் இங்கு மூல மூர்த்தியாகவே எழுந்தருளியிருக்கிறது.

மலை கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி உயரம் உயர்ந்திருக்கிறது. அதில் 1900 அடி உயரத்தில் கோயில் இருக்கிறது. அம்மலை ஏற 1200 படிகள் இருக்கின்றன. பழனியில் இருப்பது போல் நன்றாகச் செப்பம் செய்யப்பட்டபடிகள் அல்ல. என்றாலும் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக இருக்கும். உயரத்திலும் பழனிக்கு ஒன்றரைப் பங்கு இருப்பதால் ஏறுவது கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். மலை ஏற முயல்வதற்கு முன்னாலேயே அடிவாரத்தில் உள்ள கைலாயநாதர் கோயிலில் சென்று வணங்கி விடலாம். மலை ஏறி இறங்கிய பின்னர் எப்போதடா ஜாகை சென்று இளைப்பாறுவோம் என்றிருக்கும்; அடிவாரத்தில் கோயிலுக்கு எல்லாம் செல்லத்தெம்பு இருக்காதே

இந்தக் கைலாய நாதர் கோயில் ஊருக்கு நடுவில் இருக்கிறது. கமா!i 250 அடி சதுரத்தில் மதில்களுடன் கூடிய