பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/290

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

வேங்கடம் முதல் குமரி வரை

பந்தணவும் விரலாள் ஒரு
பாகம் அமர்ந்து அருளிக்
கொந்தணவும் பொழில் சூழ்கொடி
மாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார்
அவலம் அறுப்பாரே

என்று பாடியிருக்கிறார். இன்னும் ஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்திருந்தபோது மக்களை யெல்லாம் குளிர் சுரம் வாட்ட அவர், ‘செல்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்' என்று பாடி மக்களைக் குளிர் சுரம் தீண்டாமல் காப்பாற்றியிருக்கிறார்.

இந்த அர்த்தநாரீசுவரரைப் பார்த்தபின் அங்கேயுள்ள விசுவநாதர், விசாலாக்ஷி, ஆதிகேசவப் பெருமாள், நாகேச்சுரர் சந்நிதிகளுக்கும் சென்று வணங்கலாம். மேலும் மலை ஏறி பாண்டீசர் கோயிலுக்குச் சென்றும் வணங்கலாம். இக்கோயில்தான் மலைச் சிகரத்தின் உச்சியில் இருக்கிறது. இங்குள்ள லிங்க மூர்த்தியை வந்தீசர் என்றும் அழைக்கின்றனர். புத்திரசந்தானம் பெற விரும்புபவர்கள் கார்த்திகை நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் சென்று வணங்கினால் மகப்பேறு பெறுகிறார்கள்.

இந்தக் கோயிலில் நிறையக் கல்வெட்டுகள் உண்டு. ராஜகேசரி வர்மன், பரகேசரி வர்மன் காலத்துக் கல்வெட்டுக்கள் பிராமண போஜனம் செய்விக்க ஏற்படுத்திய நிபந்தங்களைக் கூறுகின்றன. அறுபதாம் படிப்பக்கம் மதுரை கொண்ட பரகேசரி வர்மனது வெற்றிகளைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவை அக்காலத்தில் கிராம சபைகள் எப்படி நடந்தன என்பதையெல்லாம் குறிக்கின்றன. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கிருஷ்ண தேவராயன், மதுரை திருமலை நாயக்கர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. மலைமேலே அக்காலத்திலே கோட்டை ஒன்று