பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/292

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30. தாரமங்கலத்துக் கயிலாயர்

ராமகாதை எல்லோரும் நன்கு அறிந்த ஒன்று. எல்லா நற்குணங்களும் நிறையப்பெற்றவனாக இருந்தவன் காப்பியத் தலைவன் சக்கரவர்த்தித் திருமகனான ராமன். அந்த ராமனுமே நிலை பிறழ்ந்து விடுகிறான். நீதியினின்றும் வழுவி விடுகிறான் என்பர், அக்கதையில் வரும் வாலி வதத்தைப் படிப்பவர்கள். வாலியும் சுக்ரீவனும் வானர வீரர்கள் ; அண்ணன் தம்பியர். இருவரும் வரம்பில் ஆற்றல் உடையவர்கள், இவர்களை எதிர்த்த அவுணன் ஒருவனைத் துரத்திக் கொண்டு செல்கின்றனர். அவுணனோ ஒரு பிலத்துக்குள் புகுந்து கொள்கிறான், வாலி தன் தம்பியைப் பிலத்துவாரத்தில் நிறுத்தி விட்டு, பிலத்தினுள் புகுந்து அவுணனுடன் போர் புரிகிறான். பிலத்தினுட் சென்ற வாலி பல நாட்களாகியும் வராதது கண்டு பிலவாயிலை அடைத்து விட்டுச் சுக்ரீவன் நாடு திரும்புகிறான். வாலி இறந்து விட்டான் என்று எண்ணிய கிட்கிந்தை வானரர்கள் சுக்ரீவனுக்கு முடிசூட்டி வைக்கின்றனர். பிலத்தினுள் பெரும் போர் செய்து அவுணன் உயிர் குடித்துத் திரும்பிய வாலி, முடிசூட்டிக் கொண்ட தம்பி சுக்ரீவன் பேரில் கோபம்