பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/293

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

279

கொண்டு அவனை நாட்டை விட்டே விரட்டி விடுகிறான். சுக்ரீவனும் கிஷ்கிந்தையை அடுத்த மலைச் சாரலிலே அனுமன் முதலிய வானர வீரர்களோடு மறைந்து வாழ்கிறான், பஞ்சவடியிலே இராவணன் சீதையை எடுத்துச் செல்ல, அவளைத் தேடிக் கொண்டு வந்த ராம லக்ஷ்மணர்களை அனுமன் கண்டு, தன் தலைவன் சுக்ரீவனிடம் அழைத்து வருகிறான். ராமனும் சுக்ரீவனது கதையைக் கேட்டு அவனுக்கு உதவி புரிய வாக்களிக்கிறான். ராமனது துணையுடன் போருக்குச் செல்கிறான் சுக்ரீவன், நடக்கும் போரிலே, 'யார் வாலி, யார் சுக்ரீவன்' என்று அறிய முடியவில்லை ராமனுக்கு.

முதல் நாள் போரில் சுக்ரீவன் தோற்று விடுகிறான். இரண்டாம் நாள் போரிலே, ராமன் விரும்பியபடி சுக்ரீவன், கொடிப் பூமாலை ஒன்றை அணிந்து செல்கிறான். அன்று நடந்த போரில் ராமன் மறைந்து நின்று பாணம் எய்து வாலியை வீழ்த்துகிறான். ராமன் சுக்ரீவனுக்குத் துணை வந்தது சரிதானா? அந்த அண்ணன் தம்பி போரில், மறைந்து நின்று அம்பெய்து வாலியை வீழ்த்தியது அறம் கடவாத செயலாகுமா? என்பதுதான் அன்று முதல் இன்றுவரையில் அறிஞர்களிடையே நடக்கும் வாதம்.

இருவர் போர் எதிரும் காலை
இருவரும் நல் உற்றாரே;
ஒருவர் மேல் கருணை தூண்டி
ஒருவர் மேல் ஒளிந்து நின்று.
வரிசிலை குழைய வாங்கி
வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ பிறிதொன்றாமோ?

என்று வாலி கேட்கும் கேள்விக்கு ராமனால் பதில் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. இது கிடக்கட்டும். இந்தப் போர்க்களத்தில் எப்படி ராமனால் வாலி அறியாது மறைந்து