பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/295

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

281

கோயில் மேற்கே பார்த்த கோயில். ஒரு காலத்தில் இந்த வட்டாரம் முழுதும் ஒரே காடாக இருந்திருக்கிறது. தண்டகாரண்யமே இப்பகுதிதான் என்பர் ஒரு சாரார். அந்த இடத்திலே பக்கத்திலுள்ள அமர குந்தியைத் தலைநகராகக் கொண்டு ஒரு சிற்றரசன் ஆண்டு வந்திருக்கிறான். அவனிடம் பெரிய ஆநிரை இருந்திருக்கிறது. அந்த ஆநிரையில் உள்ள பசுக்கள் எல்லாம் அங்கு உள்ள காடுகளில் சென்று மேய்ந்து வந்திருக்கின்றன. அதில் ஒரு பசு மட்டும் தன்னிடம் உள்ள பாலையெல்லாம் ஒரு புதரிலே சொரிந்து விட்டு வந்திருக்கிறது. இதை மாடு மேய்க்கும் சிறுவன் பார்த்து அரசனிடம் சொல்லியிருக்கிறான். அரசனும் உண்மையறியக் காட்டுக்குச் சென்று ஒரு மரத்தில் ஏறி இருந்து பார்த்திருக்கிறான். அன்றும் அந்தப் பசு தன் மடியில் உள்ள பாலையெல்லாம் அந்தப் புதரிலேயே சொரிவதைக் கண்டிருக்கிறான். அரசன் அந்தப் புதரை வெட்டியிருக்கிறான். அந்தப் புதருக்குள்ளே சுயம்பு லிங்கராக இறைவன் இருப்பதைக் கண்டிருக்கிறான். உடனே அவரையே அங்கு கைலாசநாதராகப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டியிருக்கிறான்.

இது நடந்தது கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர். இந்தக் கதையை மெய்ப்பித்துக் கொண்டிருப்பவை, இந்தத் தலத்துக்குப் பக்கத்தில் உள்ள மாட்டையாம்பட்டி, இளங்கன்றுச்சாலை என்னும் சிற்றூர்கள், இக்கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று, ஹொய்சால மன்னனான ராமநாத ராஜா 1286-ல் இக்கோயில் கட்ட முனைந்தான் என்று கூறும். இன்றைக்கு இருக்கும் கோயில், கோபுரம், சிற்ப வடிவங்கள் நிறைந்த தூண்களெல்லாம் பதினாறாம் நூற்றாண்டிலே கெட்டி முதலியார் வகையறா கட்டினார்கள் என்பதும் வரலாறு. அந்தப் பிரபலமான தல்லிக் கோட்டைச் சண்டைக்குப் பின் விஜயநகர சாம்ராஜ்யம் உலைந்திருக்கிறது. அதன்பின் இந்த