பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/298

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

வேங்கடம் முதல் குமரி வரை

உட்கோயிலின் வாயிலில் வேட்டையாடும் குதிரை வீரர்கள், இவர்கள் நடத்தும் போர்கள். இவையெல்லாம் வேலூர் சலகண்டேகவரர் கோயில் கல்யாண மண்டபத்தின் முகப்புச் சிற்பங்களை நினைவூட்டும். எல்லாம் நிரம்பத் தத்ரூபமானவை; அழகானவை. இவற்றையெல்லாம் கண்ட பின்னரே உட்கோயிலில் நுழைய வேணும். கோயில் வாயிலில் வழக்கம்போல், மேலே பச்சை வண்ணனான விஷ்ணு தன் தங்கை பச்சை நாயகியைக் கைலாய நாதருக்கு மணம் முடித்துக்கொடுக்கும் காட்சி. மங்கையைக் கைப்பிடித்த மணவாளன் கயிலாயநாதன் கோயில் கொண்டிருக்கும் தலம் ஆனதால் மங்கை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் உள்ளே சென்றால் அழகான சிற்ப வேலைகள் நிறைந்த தூண்கள் தான் எங்கு பார்த்தாலும்; விதானம் எல்லாம் தாமரைகள், மலர் இதழ்களைக் கொத்திக் கொண்டு இருக்கும் கிளிகள்தாம். எல்லாம் கல்லிலே உருப்பெற்றிருக் கின்றன. கற்சங்கிலிகள், சிங்கங்களின் வாயில் கல் உருளைகள்,

இன்னும் அஷ்டதிக்குப் பாலகர்கள் என்றெல்லாம் எண்ணற்ற சிற்பச் செல்வங்கள்.

கோயிலுள் கயிலாயநாதர் மேற்கு நோக்கிக் கருவறையில் இருக்கிறார். ஒவ்வொரு வருஷமும் மாசி மாதம் 9, 10, 11 தேதிகளில் மாலை ஆறு மணி அளவில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் சூரிய ஒளி வாயில்களைக் கடந்து,