பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/301

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

287

அப்பாலான், இப்பால் செம்பொன்
புனத்தகத்தான், நறுங் கொன்றைப்
போதில் உள்ளான், பொருப்பிடையான்
நெருப்பிடையான், காற்றில் உள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து
உச்சி உள்ளான் காளத்தியான்
அவன் என்கண் உள்ளானே.

என்று அப்பர் பெருமான் பாடியது போல இவ்வூர்க் கயிலாயநாதனும் எல்லோருடைய கண்களிலும் நிறைந்து நிற்பான்.