பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/303

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

289

வடமொழியில் குயில் என்று அர்த்தம்' என்று சொன்னேன். இதைச் சொன்னதும் கவிஞர் உத்சாகமாகப் பாட ஆரம்பித்தார். அவர் அன்று பாடிய பாட்டு இதுதான்,

காகம் குயில் இரண்டும்
கார்நிறத்தால் தம்முள் ஒப்பே
ஆகும் எனினும்
அணிவசந்தம் - போகம் செய்
வேகமுறும் காலத்து
வேறு வேறாம் அவைதாம்
காகம் காகம், பிகம் பிகம்

இந்தப் பாட்டைக் கேட்ட அறிஞர் ‘சபாஷ்' போட்டு நண்பரை மிகவும் பாராட்டினார். அறிஞர் தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் பாண்டித்தியம் உடையவர். தமிழ்ப் புலமை மாத்திரமே உடைய கவிஞர், அருமையான சமஸ்கிருத சுலோகத்தின் பொருளையே நல்ல கவிதையில் கூறியதைக் கேட்டு அதிசயித்து நின்றார், அறிஞர் சொன்னார் : ‘வடமொழியும் தென்மொழியும் இரண்டு ஜீவ நதிகள். இரண்டும் தனித்தனியாகப் பாய்ந்து பரவும்போது அதில் அதிக வேகமோ, சாந்நித்யமோ இருப்பதில்லை. இரண்டும் இணைந்து கலந்துவிட்டால், அப்படிக் கலக்கும் இடத்துக்குத்தான் பெருமை. தெரியாமலா சொல்லியிருக் கிறார்கள், கங்கயுைம் யமுனையும் கலக்கும் அந்தப் பிரயாகையில் சென்று முழுகினால் எவ்வளவோ புண்ணியம் உண்டு என்று. இரண்டு கலாசாரங்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பதால் ஏற்படும் மொழி வளர்ச்சி, பெருமைகளைத்தான் அவர் குறிப்பிட்டார்.

நான் சொன்னேன்:'என்ன? உதாரணத்துக்கு அத்தனை தொலைதூரம் சென்று வீட்டீர்கள். நம் தமிழ் நாட்டிலேயே ஒரு பிரயாகை இருக்கிறதே. தக்ஷிணப் பிரயாகை என்ற பெயரோடு. காவிரியும் பவானியும் கலக்கும் அந்தப் பவானி