பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/313

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

299

விழுங்கிவிட்டது. மற்றொருவன் மட்டும் வீடு வந்து சேர்ந்துவிட்டான். அப்படித் தப்பிப் பிழைத்த பையனுக்கு இன்று உபநயனம் நடக்கிறது. அதுதான் அந்த வீட்டில் மங்கல ஒலி. முதலையுண்ட பையனைப் பெற்றவர்கள் எதிர்வீட்டுக்காரர்கள். தங்கள் பிள்ளையிருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்து மகிழ்ந்திருப்போமே என்று எண்ணியிருக்கிறார்கள். அந்த ஏக்கம் காரணமாகவே அவனது பெற்றோர் அழுகின்றனர்' என்கிறார்கள். இதைக் கேட்ட சுந்தரரின் உள்ளம் கருணையால் நெகிழ்ந்திருக்கிறது. அந்தப் பிள்ளைகள் இருவரும் நீராடிய குளம் எங்கேயிருக்கிறது என்று கேட்டு அக்குளக்கரைக்கே நடந்திருக்கிறார். அவர்பின் ஊரே திரளாகச் சென்றிருக்கிறது. குளக்கரை சென்று சேர்ந்ததும் பாடத் தொடங்கியிருக்கிறார். அவரோ இறைவன் விரும்புகிறபடியெல்லாம் தமிழ்ப் பாக்கள் பாடி அவரை மகிழ்விக்கிறவர் ஆயிற்றே. பாட்டு ஒன்று, இரண்டு, மூன்று என்று வளர்ந்திருக்கின்றது ; பின்னர் நான்காவது பாட்டு வருகிறது. பாட்டிலே வேண்டுகோள் ஒன்றும் இல்லை. ஒரு கட்டளையே பிறக்கிறது.

உரைப்பார் உரைப்பவை
உள்க வல்வார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா? ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப்
புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப்
பிள்ளைதரச் சொல்லு காலனையே.

என்பது பாட்டு. உத்தரவு இறைவனுக்குத்தான். இறைவன், காலன் மூலமாக முதலையிடம் பிள்ளையைத் தரச்சொல்லவேண்டு மென உத்தரவு, வன்தொண்டராம் சுந்தரரின் உற்ற தோழன் ஆயிற்றே இறைவன், இந்த உத்தரவுக்கு