பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/316

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

வேங்கடம் முதல் குமரி வரை

வாயிலில் உள்ள செல்வவிநாயகர், மணிவாசகர், சுந்தரர் எல்லோரையும் வணங்கியே உள் செல்ல வேண்டும். சுவாமி

கருணாம்பிகை கோயில்

சந்நிதியை அழகிய வேலைப்பாடமைந்த நவரங்க மண்டபம் அழகு செய்யும். அங்கு ஊர்த்துவ தாண்டவர், காளி, வீரபத்திரர் முதலியோரது சிலைகள் உண்டு. இந்த மண்டபம், அர்த்த மண்டபம் எல்லாம் கடந்தே கருவறையில் உள்ள இறைவனைக் காண வேணும். அவிநாசி அப்பர் சுயம்பு மூர்த்தி, காசி விகவநாதரது வேரில் கிளைத்த மூர்த்தி என்பார்கள் இதனால்தானே 'காசியில் வாசி அவிநாசி' என்றும், இத்தலத்தையே தென்காசி, வாரணாசி என்றும் கூறுகின்றனர்? இந்த இறைவனைத்தான் 'அரிய பொருளே! அவிநாசி அப்பா!' என்று கூவியழைத்திருக்கிறார் மணிவாசகர். அவிநாசி அப்பரை வணங்கி விட்டு, வெளி வந்து நவரங்க மண்டபத்தைக் கடந்தே அம்மன் சந்நிதிக்குச் செல்ல வேணும். செல்லும் வழியில் ஒரு மண்டபம்; திருக்கல்யாண மண்டபம் என்பார்கள், இந்த