பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/318

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

வேங்கடம் முதல் குமரி வரை

அவிநாசியப்பர்

தலைவலி போம்' என்பதற்கேற்ப இடம் மாறி உட்கார்ந்து பிணக்கைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்!

அம்பாள் கோயில் முன்பும் ஒரு பெரிய மண்டபம். அதிலும் சிற்ப வடிவங்கள். அவை சிறப்பானவை அல்ல. கருவறையிலுள்ள கருணாம்பிகையைத் தரிசிக்கலாம். அக்கருவறையின் மேல்புறச் சுவரில் ஒரு தேள் செதுக்கப்பட்டிருக்கிறது. அதையும் வணங்குகின்றனர் மக்கள், தேள் எப்படி இங்கு வந்தது என்பதற்குத் தல வரலாற்றில் விளக்கம் ஒன்றுமில்லை. தேளுக்கும் அருளும் கருணை வாய்ந்தவள் கருணாம்பிகை என்று விளக்க முனைந்த கலைஞன் கற்பனையில் உருவாகியிருக்கலாம் அந்தத் தேள். நாமும் அன்னையின் கருணையை நினைத்து வாழ்த்தி வணங்கிவிட்டு வெளியே வரலாம். இந்தக் கோயிலில் நான்கு தீர்த்தங்கள். கோயிலுக்கு உள்ளேயே காசிக் கங்கை என்னும் கிணறு, கோயிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம். நள்ளாறு கோயிலுக்கு வடபுறம் ஓடுகிறது. கோயிலுக்கு முன்புள்ள திருக்குளத்துக்கு எதிரில் கோயிலுக்கு