பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

305

வடபுறமாக ஒரு தனிக்கோயில் இருக்கிறது. அங்கு அம்பிகை தவக்கோலத்தில் இருக்கிறாள். இது அவளைக் கருணாம்பிகையாக இறைவன் ஏற்றுக்கொள்ளும் முன் இருந்த தவக்கோலம். இங்கு பாதிரிமரம் ஒன்றும் இருக்கிறது. அன்று திருப்பாதிப்புலியூரில் காணாமல் தவித்தோமே, அந்த மரத்தை இங்கேயாவது பார்க்க முடிந்ததே என்பதில் மகிழ்ச்சி.

இக்கோயிலைக் கட்டிய பெருமையைச் சோழ மன்னர்களே தட்டிக் கொண்டு போகிறார்கள். ஆதித்த சோழன் காலம் முதல் இருநூற்று ஐம்பது ஆண்டுகள் கொங்கு நாடு, சோழ கேரள மண்டலம் என்ற பெயரோடு சோழர் ஆட்சியில் இருந்திருக்கிறது. 1149 முதல் 1183 வரை சோழ மண்டலத்தை ஆண்ட குலோத்துங்கன் என்னும் கொங்குச் சோழன் காலத்தில் இக்கோயில் முதல் முதல் கட்டப்பட்டிருக்க வேண்டும். இவன்றன் சாமந்தகனான மருதன் மலையன் என்னும் குலோத்துங்க சோழ விக்கிரமன் இக்கோயிலில் நந்தா விளக்கு ஒன்று எரிய நிபந்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறான். இந்தக் குலோத்துங்கனுக்குப் பின் இந்த நாட்டையாண்ட வீரசோழன், வீரராஜேந்திரன் முதலியோர் காலத்தில் சீகாழியான், ஏரானபுரத்து வணிகன் ஆற்றலுடையான், திருப்புறம்பயமுடையான் முதலிய காரியஸ்தர்கள் பலவகைத் தானங்களை இக்கோயிலுக்குச் செய்திருக்கிறார்கள்.

சோழர்களுக்குப் பின் இக்கொங்கு நாட்டை ஆண்டவர்கள் பாண்டியர்கள். கொங்குச் சோழர்களுக்குச் சளைக்காமல் கொங்குப் பாண்டியர்களும் அவிநாசி அப்பர் ஆலயத்துக்குப் பல திருப்பணிகளையும், பல தானங்களையும் செய்திருக்கிறார்கள். இவர்களில் வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், குல சேகரப் பாண்டியன் முதலியோர் முக்கியமானவர்கள். பாண்டியர்களுக்குப் பின் ஹொய்சலர்களும், மைசூர் அரச வம்சத்தினர்களும் செய்த திருப்பணிகள் பலப்பல. இன்றும் மைசூர் மகாராஜா இந்தப் பக்கம்