பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/320

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

வேங்கடம் முதல் குமரி வரை

வரும்போதெலலாம் அவிநாசியப்பரைத் தரிசிக்காமல் செல்வதில்லை.

'என்ன என்னவெல்லாமோ கதை வளர்த்துக் கொண்டிருக்கிறீர். முதலையுண்ட பாலனை வரவழைத்த திருக்குளம்’ எங்கிருக்கிறது? என்று நீங்கள் முணு முணுப்பது காதில் கேட்கிறது. அங்கு அழைத்துப் போகாமல் இருப்பனோ? கோயிலிலிருந்து மூன்றுநான்கு பர்லாங் தூரத்தில் தென்மேற்குத் திசையில் ஓர் ஏரி இருக்கிறது. அதனை இன்று தாமரைக் குளம் என்று அழைக்கின்றனர். அந்தக் குளக்கரையில் ஒரு சிறு கோயில் இருக்கிறது. அக்கோயிலுள் சுந்தரர் இருக்கிறார். அவர் முன் முதலை வாயினின்றும் பிள்ளை வெளியே வருவது போன்ற சிலை உருவம் ஒன்றும் இருக்கிறது. குளக்கரையில் ஒரு பெரிய ஆலமரம். அங்கிருந்துதான் பாடியிருக்கிறார் சுந்தரர், தமது தேவாரப் பாடல்களை. இன்றும் பங்குனி உத்திரத்தில் அவிநாசியப்பர், அந்தக் குளக்கரைக்கு எழுந்தருளுகின்றார். முதலை வாய்ப் பிள்ளையை அழைத்த திருவியைாடல் உத்சவமாகவே கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்றினை,

நாட்டார் அறிய முன்னாளில்
நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பில் சிறிய மறைப்
புதல்வன் தன்னைப் புக்கொளியூர்
தாட்டாமரையின் மடுவின்கண்
தனிமா முதலைவாய் நின்று
மீட்டார் கழல்கள் நினைவாரை
மீளா வழியில் மீட்பனவே.

என்று சேக்கிழார் பாடி மகிழ்கிறாரே, அந்தக் காலத்தில் தான் இந்த அதிசயம் நடந்ததென்றில்லை. சில நூறு ஆண்டுகளுக்கு