பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/321

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

307

முன் குருநாத பண்டாரம் என்பவர் அவிநாசியில் வாழ்ந்திருக்கிறார். குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்க வரவில்லை என்பதற்காக அரசாங்க ஊழியர்கள் அவர் பூசித்த சிவலிங்கத்தை எடுத்துக் குளத்தில் எறிந்திருக்கிறார்கள். குருநாத பண்டாரமோ பூசை செய்யாமல் உணவருந்துவதில்லை. பூசை செய்யவோ லிங்கம் இல்லை. பட்டினியாய்க் கிடந்திருக்கிறார். வேறு வழியில்லை அவிநாசியப்பருக்கு. பண்டாரத்தின் லிங்கத்தை ஒரு மீனை விழுங்கச் செய்து அந்த மீனை நீந்தி வந்து லிங்கத்தைக் கரையில் உமிழவும் செய்திருக்கிறார். இதற்குக்கூட ஒரு சிற்ப வடிவம் அங்கே இருக்கிறது.